ஈழத்திருநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வற்றாப்பளைக் கண்ணகையம்மன் ஆலயம் வடஇலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமன்றி தென்னிலங்கை, கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாகவும் மிளிர்கின்றது. கண்ணகி வழிபாடு பற்றிய மிகப் பழைய இலக்கியச் சான்றாக சிலப்பதிகாரம், சிலம்புகூறல், கோவலானர் கதை, கண்ணகி வழக்குரை என்பன மிளிர்கின்றன. ஈழத்தில் கண்ணகி வழிபாடு பரவியமை பற்றிய சில தகவல்களை ராஜாவலிய, ராஜரத்நாகர என்னும் சிங்கள வரலாற்று நூல்கள் தருகின்றன. இலங்கையில் சைவத் தமிழ் மக்கள் மாத்திரமன்றிப் பௌத்த சிங்கள மக்களும் பத்தினித் தெய்வத்தை வழிபடுகின்றனர். பௌத்த ஆலயங்களில் ஷபத்தினித் தெய்யோ| என்னும் பெயரால் கண்ணகி அம்மன் வழிபாடு நடைபெறுகின்றது. கண்டியில் தற்போது புத்தபெருமானின் புனித தந்தத்திற்கு எடுக்கப்படும் பெரகரா ஆரம்பத்தில் பத்தினித் தெய்வத்திற்கு எடுக்கப்பட்ட விழாவென்று ஆய்வாரள் கருதுகின்றனர்.இங்ஙனம் இலங்கையிலுள்ள இரு இனமக்களும் இணைந்து வழிபடும் பத்தினித் தெய்வ வழிபாடு வற்றாப்பளையில் தோற்றம் பெற்ற வரலாறு ஆய்வுக்குரியது. சுpலம்பு கூறல் காவியமும் அம்மன் சிந்து என்னும் சிற்றிலக்கியமும் கண்ணகி அம்மன் வற்றாப்பளையில் கோயில் கொண்டதைப் பற்றிச் சில குறிப்புகளைத் தருகின்றன.கண்ணகி மதுரையை எரித்ததன் பின்பு இலங்கைக்கு வந்து பல இடங்களில் தங்கினாள். வற்றாப்பளைக்கு வந்ததைச் சிலம்பு கூறல் என்னும் கண்ணகி காப்பியம் கூறுகின்றது. பெரிய வதிசயமுடனே பேண்ணணங்கு மிலங்கை நண்ணி சரியரிய வரங் கொடுத்துத் தார்குழல் வற்றாப்பளையில் மருவியிருந்த தருள் கொடுத்த வளர்கதிரை மலையணுகிகண்ணகி ஈழத்தில் வந்து கோயில் கொண்ட இடங்களை அம்மன் சிந்து பட்டியல் இட்டுக் கூறுகின்றது. அங்கொணா மைக்கடவை செட்டிபுல மன்சூழ் ஆனதோர் வற்றாப்பளைமீ துறைந்தாய் பொங்குபுகழ் கொம்படி பொறிக்கடவை சங்குவயல் புகழ்பெருகு கோலங் கிராய்மீ துறைந்தாய்.கண்ணகி வழிபாட்டைப் பத்தினித் தெய்வ வழிபாடாக ஈழத்தில் அறிமுகம் செய்து வைத்தவன் கி.பி. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கஜபாகு மன்ன் ஆவான் எனச் சிலப்பதிகாரச் செய்தி கூறுகின்றது. சேரமன்னன் கண்ணகிக்கு விழாவெடுத்த போது கடல்சூழ் இலங்கைக் கஜபாகு மன்னனும் அவ்விழாவிற் பங்கு கொண்டான் என்றும் அவனே ஈழத்தல் கண்ணகி வழிபாட்டை அறிமுகப்படுத்தினான் என்றும் கூறப்படுகின்றது. ஆனால் கண்ணகி கதை சிலப்பதிகார காலத்துக்கு முன்பே நிகழ்ந்திருக்கிறது. சிலப்பதிகாரம் இயற்றப்படுவதற்கு முன்பே கண்ணகி கதை மரபுகள் வழங்கி வந்தன என்பதற்கு நற்றிணையில் சான்றுண்டு. பெண்மையைத் தெய்வமாகப் போற்றும் பண்பு தமிழ் மக்கள் மத்தியில் வரலாற்றுக்கு முந்திய காலந்தொட்டு நிலவி வந்துள்ளது. வற்றாப்பளையிலிருந்தே கிழக்கு மாகாணத்திற்கு கண்ணகி அம்மன் வழிபாடு பரவியதென்பர். கண்ணகி அம்மன் வற்றாப்பளைக்கு வந்து இடைச் சிறுவர்களுக்குக் காட்சிகொடுத்த நிகழ்;ச்சியையும் அதற்கு முன்பு முள்ளியவளைக்கு வந்ததையும் அம்மன் சிந்து குறிப்பிடுகின்றது.முந்தித் தடங்கிரியலே பாண்டியன் தன்மதுரையை முதுகனல் கொளுத்தியே ஒருசிலம் பதனால் பிந்திவந் தங்கொணா மைக்கடவை தனிலும் பேரான முள்ளிய வளைப்பதியில் வந்துறைந்தாய் தந்திமுகன் கோவிலில் வந்துமடை கண்டு தார்கட லுப்புத் தண்ணீர் விளக்கேற்றி அந்திப் பொழுதிலே நந்திக் கடற்கரையில் வைகாசித் திங்களில் வந்தமர்ந்தாயே.அடவிக் கடற்கரையில் விடுதிவிட வந்தாய் அழகான மாட்டிடையர் கண்ணில் அகப்பட்டாய் பாரப்பா என்தலையில் பேனதிகம் என்றாய் அழகான தலையதனைப் பிளவாய் வகிர்ந்தார் பாங்கான கண்களோ ராயிரமுண்டு… ……எந்தனுக்குப் பசியதிகம் என்றாய் பால்புக்கை மீட்கப் பறந்திட்டாய் தாயே.இடைச்சிறுவர்கள் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது மூதாட்டி ஒருத்தி அவ்விடம் வந்து வேப்பம்படவாளில் இருந்தாள். சிறுவர்கள் மூதாட்டியை வரவேற்று உபசரித்தனர். தனக்குப் பசிக்கிறது என்று சொல்லவே அவர்கள் பாற்புக்கை சமைத்துக் கொடுத்தளர். பொடுபட்டு விட்டதனால் விளக்கேற்றுமாறு மூதாட்டி கூறினாள். ஏண்ணெய் இல்லையெனச் சிறுவர்கள் கூறினர். குடல்நீரை அள்ளி எடுத்து விளக்கேற்றுமாறு மூதாட்டி சொன்னாள். அங்ஙனமே அவர்கள் விளக்கேற்றினர். தனது தலையில் பேன் அதிகமாகையால் தலையில் பேன் பார்க்குமாறு மூதாட்டி கேட்டுக் கொண்டாள். சிறுவர்கள் பார்த்த போது தலையில் ஆயிரம் கண்கள் தென்பட்டன. அவர்கள் ஆச்சரியமும் மலைப்புமுற்றனர். திடீரென மூதாட்டி மறைந்து விட்டாள். ஷஷகைவாசி மாதம் வருவேன் ஒரு திங்கள்|| என அசரீரி ஒலித்தது. இடைச்சிறுவர்கள் இதனை முதியோருக்கு அறிவித்தனர். அவர்கள் முதலில் இதனை நம்ப வில்லை. அவர்கள் அவ்விடத்தில் எங்கும் தேடியும் மூதாட்டியைக் காணவில்லை. மூதாட்டி இருந்த வேப்பம்படவாள் தளிர் வந்திருப்பதைக் கண்டனர். அந்த இடத்தில் சிறு ஆலயம் அமைத்து வழிபாடு செய்தனர். வைகாசி மாதத்துப் பூரணையை அண்டிய திங்கட்கிழமை பொங்கல் செய்தனர். அயல் கிராமத்து மக்களும் இவ்வழிபாட்டில் கலந்து கொண்டனர். வழிபாடு தொடர்ந்த அக்காலத்தில் உயர் வேளாண்குலத்தைச் சேர்ந்த ஒருவரே பூசாரியாராக இருந்தார். திங்கள் தோறும் பூசை நடைபெற்றது. கைவாசி மாதத்தில் சிறப்பாகப் பொங்கல் நடைபெற்று வந்தது. தஞ்சாவூரிலிருந்து பக்தஞானி என்னும் கண்ணகிப் பக்தர் இங்கு வந்தார். இவர் இங்கு கண்ணகி அம்மனுக்குச் செய்யப்படும் சில கிரியை நெறிமுறைகளை அறிமுகப்படுத்தினார். இதற்குத் தேவையான சாதனங்களை இந்தியாவில் இருந்து கொண்டு வந்தார். கிரியை முறைகளை ஏட்டில் எழுதி வைத்தார். இவரின் பத்ததிப்படியே இன்று வரையும் பொங்கல் நடைபெறுகின்றது. பக்தஞானி என்னும் அடியார் முள்ளியவளையிலேயே வாழ்ந்தார். இப் பெரியார் சிவபதம் அடைந்த பின்னர் இவரைத் தகனம் செய்த முள்ளயவளை நாவற்காட்டில் இவருக்குப் பொங்கல் செய்வது வழக்கம். வற்றாப்பளைப் பொங்கலுக்குப் பின்னர் வரும் வெள்ளிக்கிழமை பக்தஞானி பொங்கல் நடைபெறும். வற்றாப்பளையில் தொடங்கிய பொங்கல் மரபு பின்னர் முள்ளியவளையிலும் தொடர்புபடுத்தப்பட்டது. முள்ளியவளை ஈழத்தமிழர் வரலாற்று மூலமாகத் திகழும் வையாபாடலிலும், கதிரையப்பர் பள்ளு என்னும் பிரபந்தத்திலும் குறிப்பிடப்படுகின்றது. வன்னிப்பிரதேசத்திலுள்ள ஏழுவன்னிமைகளில் ஒன்றான முள்ளியவளை வன்னிமை எழுபது கிராமங்களை உள்ளடக்கி இருந்ததாக ஆய்வாரள் கூறுகின்றனர். முள்ளியவளையிலுள்ள காட்டுவிநாயகர் ஆலயத்தில் பொங்கலுக்கான முன்னோடி நிகழ்ச்சிகள் இடம்பெறத் தொடங்கின. வற்றாப்பளைப் பொங்கலுக்கு முதல் ஏழுநாள் மடைகளும் பொங்கலும் இன்றும் காட்டுவிநாயகர் ஆலயம் என அழைக்கப்படும் மூத்தநயினார் ஆலயத்திலேயே நடைபெற்று வருகின்றன. முள்ளியவளை வன்னிச்சிற்றரசரின் இராஜதானியாக இருந்தாலும் பக்தஞானி முள்ளியவளையில் வசித்ததும் இதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம். மேலும் விநாயகர் பெருமானை வழிபட்டு எச்செயலையும் தொடங்கும் சைவமரபின் செல்வாக்கையும் இரு கிராமத்தவர்களுக்கும் இடையே இருந்த உறவுத் தொடர்புகளையும் உணர்த்தும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்தது எனலாம். அடுத்தகட்டமாக கண்ணகி வழிபாட்டு மரபில் ஆகம மரபு தொடர்பபடுத்தப்படுவதை அவதானிக்கலாம். வேளாளரும், பிற குலப்பிரிவினரும் இணைந்து நடத்தி வந்த பொங்கல் விழாக்களில் ஆகம முறைப்படி பூசை செய்யும் அந்தணர்களும் சேர்க்கப்பட்டனர். மக்கள் கிராமியத் தெய்வ வழிபாட்டில் ஆழமான நமப்பிக்கையுடையவர்கள். ஆரியரின் செல்வாக்கினாலேயே அந்தணர்கள் பூசை செய்யும் முறை ஏற்பட்டது. ஆகம முறைப்படி பூசை நடைபெறும் ஆலயங்களில் பழைய கிராமிய மரபுகள் புறக்கணிக்கபடுவதைக் காணலாம். ஆனால் வற்றாப்பளையில் கிராமிய மரபும் ஆகம மரபும் இணைந்து செயல்படுவதைக் காணலாம். தென்னைமர அடியிலிருந்து பிராமணர்கள் முள்ளியவளைக்கு அழைத்துவரப்பட்டுக் குடியமர்த்தப்பட்டனர். பொங்கல் மடை நிகழ்ச்சிகளில் ஆகம நெறிக்குரிய பூசை முதலியவற்றைப் பிராமணர் செய்யும் மரபு ஏற்பட்டது. ஆயினும் பொங்குதல்,படைத்தல் என்னும் மரபுவழிக் கிரியைகளைக் கட்டாடி உடையார் என அழைக்கப்படும் பூசாரியாரும் பிறகுலத் தொழிலாளரும் ஒழுக்கசீலராக இருந்து ஆற்றி வருகின்றனர். இவ்வழிபாட்டு மரபில் சிலம்பு, பிரம்பு, அம்மானை, உடுக்கு முதலிய புனித சின்னங்களும் வெள்ளியால் அமைந்து ஷமுகபடாம்| என்னும் அமைப்பும் சித்திரச் சேலைகளும் இடம்பெறத் தொடங்கின. பக்தஞானி என்பவரே இந்த ஏற்பாட்டைச் செய்தார் என்று கூறப்படுகின்றது. கும்பத்தல் வெள்ளிமுக அமைப்பைப் பொருத்தி வெள்ளியாலான கைகால் என்பவற்றை முறைப்படி அமைத்து கண்ணகி அம்மனது உருவம் அமைக்கப்படும். இப்புனித சின்னங்களை அம்மனுக்குப் பூசை செய்யும் அந்தணர்கள் தங்களது பாதுகாப்பில் முள்ளியவளைக் கல்யாணவேலவர் ஆலயத்துக்கு அருகாமையில் அமைந்திருந்த தமது இல்லத்தில் வைத்துப் பூசித்து வந்தனர். வெள்ளிதோறும் இல்லத்தில் பூசையும் திங்கட்கிழமைகளில் வற்றாப்பளைக் கோயிலில் பூசையும் நிகழ்ந்து வந்தன. அடுத்தகட்டாக ஆகம முறைப்படி அம்மனை விக்கிரக வடிவில் அமைத்த நிகழ்ச்சியாகும். புழைய ஆலயம் இடிக்கப்பட்டு புதிய ஆலயம் தூபியுடன் அமைக்கப்பட்டது. கண்ணகி அம்மன் ஆலயம் புதிய நிர்வாகத்தின் கீழ் நவீன தேவாலயத்துக்குரிய பொலிவுடன் வளர்ந்து வருகிறது. யாழ்ப்பாணத்தில் நாவலரின் எதிர்ப்பால் கண்ணகை அம்மன் கோவில்கள் மனோன்மணி அம்மன் கோயில்களாவும், இராஜராஜேஸ்வரி கோயில்களாகவும் மாற்றம் பெற்றன. கிராமியத் தெய்வ வழிபாட்டில் ஆழமாக ஊறியுள்ள யாழ்ப்பாண மக்கள் கால்நடையாகவும், கடல் மூலம் த்தையிலும் பிரசித்தி பெற்ற வற்றாப்பளை அம்மன் ஆலயத்துக்குவரத் தலைப்பட்டனர். வட இலங்கையில் சுமார் முப்பது கண்ணகி அம்மன் கோயில்கள் இருந்தபோதும் அவற்றுள் வற்றாப்பளை அம்மன் கோயிலே தேசத்துக்கோயிலாகப் பெருந்தொகையான பக்தர்களை ஈர்ப்பது சிறப்பம்சமாகும். இந்த வரலாற்று மரபை நோக்குமிடத்து வற்றாப்பளைக் கண்ணகி அம்மனுக்கும் சிலப்பதிகாரம் காட்டும் கண்ணகிக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை அவதானிக்க முடியும். சுpலப்பதிகாரக் கண்ணகி மானிடப் பெண், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து தன் கற்பின் திறத்தால் தெய்வநிலை எய்தியதைச் சுட்டி நிற்கிறது. ஒரு மானிடப் பெண்ணைத் தெய்வமாகப் பூசிக்க சைவசமய மரபில் இடமில்லை. வற்றாப்பளை கண்ணகி, உமாதேவியாரின் அவதாரமாகவே கருதப்படுகின்றாள். மதுரையில் கோயில் கொண்டிருந்த உமாதேவியார், பாண்டிய மன்னனைப் பழிவாங்கும் நோக்குடன் மாங்கனியில் தோன்றி மாநாகச் செட்டியின் மகளாக வளர்ந்தாள் எனச் சிலம்பு கூறல் கதை அமைகிறது. கண்ணகி அம்மன் வழிபாட்டு மரபில் மரபு வழியாக வரும் பொங்கிப் படைக்கும் முறைக்கும் ஆகம முறைப்படியான வழிபாட்டிற்கும் இடையேயுள்ள முரண்பாட்டையும் நாம் நோக்க வேண்டும். கதை மரபின் படி ஆரம்பத்தில் வேளாண் மரபைச் சேர்ந்த பூசாரியாரே பொங்கிப் படைத்தார். பிற தொழிலாளர் குலப்பிரிவினர் அதற்குத் துணை புரிந்தனர். பின்னர் ஓர் இடைக்காலப் பகுதியில்தான் பிராமணர் கிரியைகட்கு வந்தனர். அவர்கள் பொங்கலின் எல்லாக் கிரியை முறைகளுடனும் தொடர்பு கொள்ளவில்லை. வழிபாட்டு முறைகளில் ஆகம மரபுக்கு அப்பாற்பட்ட பலஅ ம்சங்கள் வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் உண்டு. எனினும் ஆகம மரபின் தாக்கத்தால் தனது தனித்தன்மையை இழக்காமல் பழைய இனக்குழு மக்களின் வழிபாட்டு மரபைப் பேணுவதில் உறுதியாக நிற்கும் அதேவேளையில் ஆகம முறைப்படி அமைந்த திருவிழா, கும்பாபிNஷகம் முதலியவற்றையும் புரிவதில் ஆர்வங்காட்டி இருமரபுகளையும் பொருத்தமுற இணைத்துள்ளமை பாராட்டிற்குரியது. இப்படிப் பொருத்தமான வகையில் இரு வழிபாட்டு மரபுகளையும் இணைக்க முடியாத நிலையில் ஈழத்தின் வடபகுதியிலுள்ள ஆலயங்கள் ஆகம மரபுக்குப் பணிந்து கொடுத்து மாற்றம் அடைந்துள்ளமையை அவதானிக்கலாம். கண்ணகி அம்மனின் அற்புதங்கள் பல அடியாரை ஈர்த்துள்ளமை மனங்கொள்ளத்தக்கது. கடல்நீரில் விளக்கெரிய வைத்தல், பட்ட படவாள் தளிர்த்து மரமாதல், தலையில் ஆயிரம் கண்களை காட்டியமை. புனிச்சையை ஆட்டுவித்து காயால் பறங்கித் துரைக்கு எறிவித்தமை, ஆலயப் பொருள்களைக் களவு செய்தோரின் கண்களை மறைத்தமை முதலான பல அற்புதங்களை வற்றாப்பளை அம்மன் செய்ததாகக் கதையுண்டு. வற்றாப்பளை அம்மன் அம்மை, பொக்கிளிப்பான், சின்னமுத்து, கண்ணோய் போன்ற நோய்களைக் குணப்படுத்துவாள் என்று நம்பப்படுகின்றது. ஆலயத்தில் வழங்கப்படும் வேளையும் விபூதியும் தீய ரோகங்களிலிருந்து மக்களைக் காப்பாற்றும் என்பது அடியார்களின் அனுபவ நிலைப்பட்ட முடிவாகும். ஆண்டுதோறும் வைகாசிப் பூரணையை அண்மிய திங்கட்கிழமை பொங்கல் கோலாகலமாக நடை பெறும். பொங்கலுக்கு ஒருவாரம் முன்பதாகவே வற்றாப்பளையும் அயற்கிராமங்குளம் பக்தர் கூட்டத்தினால் நிறைந்திருக்கும். குhல்நடையாகக் கதிர்காமம் செல்வோர் அம்மன் பொங்கலைத் தரிசித்த பின்னர் கண்ணகி அம்மனின் வழிகாட்டலுடன் யாத்திரையைத் தொடர்வர். |
வற்றாப்பளை
கால மாற்றங்களும் வளர்ச்சிப்படிகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது இயல்பானதே. அம்பாள் ர்ழ நாட்டின் பத்தாம் பதியாகிய வற்றாப்பளையில் மாடு மேய்ந்த சிறுவர்களுக்குக் காட்சி கொடுத்த காலம் தொடக்கம் இன்றுவரை ஆலயம் நிர்வகிக்கப்பட்ட வழிகளையும், நிர்வாகசபையின் தோற்றம், கட்டுப்பாடு, கடமைகள் என்பவற்றையும் சுருக்கமாக விள்க்க முயல்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். ஆரம்பத்தில் ஆலயம் அமைந்துள்ள இடமானது: இருப்பக்கம் நந்திக்கடலும் மற்றிரு பக்கம் காடும், நீரூற்றுக்களுமு;, புல் நிலங்களும் அமைந்ததொரு அமைதியான தனியிடமாகவு இருந்துள்ளது. ஏறக்குறை இரண்டு மைல் தூரத்துக்கப்பாலேயே மக்கள் குடியிருப்புக்கள் அமைந்திருந்தன. வருடாந்தம் நடைபெறும் பொங்கல் நிகழ்ச்சியும், மக்கள் தாம் வைத்த நேர்த்திக்கடன்களை நிறைவேற்றச் செய்வித்த பூசை, மடை, மண்டகப்படி, குளிர்த்தி என்பஒவுமே அக்காலத்தில் நடைபெற்ற ஆலய நிகழ்ச்சிகளாகும்.
‘கட்டாடுடையார்’ என அழைக்கப்பெறும் பூசாரியாரே இக்காலத்தில் ஆலயப் பூசைகள் நிருவாகங்கள் எல்லாவற்றுக்கும் பொறுப்பாய் இருந்துள்ளார். பொங்கலுக்குத் தேவையான நெல், தேங்காய், பழம், பாக்கு, வெற்றிலை, பால், நெய் போன்ற எல்லாப் பொருட்களையும் வற்றாப்பளையிலும் முள்ளியவளை, தண்ணீரூற்று, முல்லைத்தீவு போன்ற அயற் கிராமங்களிலும் வாழ்ந்த வசதிபடைத்த கமக்காரரிடமிருந்து பெற்றுள்ளார்.
இவ்வழக்கத்தின் அiடிப்படையிலேயே மிக அண்மைக்காலத்தில்கூட ஒரு சில கமக்காரர், பூசாரியிடம் பொங்கல் நெல் ஒப்படைக்கும் முறை இருந்து வந்துள்ளது என அறிய வந்துள்ளது. கிராம மக்களுக்கு, நோய்கள் காணும்போது அவற்றிற்கெல்லாம், பூசாரியார் கொடுக்கும வேளை (மஞ்சள் தோய்த்துப் பூசையில் வைத்த சீலை) விபூதி, தீர்த்தம் என்பனவே மருந்தாக உதவின. இதனால் சமூகத்தில் உயர்ந்ததொரு இடத்தினைப் பூசாரியார் பெற்றுக் கொண்டதுடன் ஆலய நிhவாகத்தினையும் நடாத்தித் தேவையான பொருளுதவிகளையும் பெற்றுக் கொண்டார். இவ்விதம் வேளை, வீபூதி முதலியன கொடுக்கும் வழக்கம் ஆலயத்தில் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எனவே இக்காலத்தில் ஆலயம் சம்பந்தமான எல்லாக் கடமைகளும், நிருவாக அதிகாரமும் பூசாரிக்கே உரியதாயிருந்துள்ளது.
வன்னியர் காலம்.
ஆடுத்தபடியான காலகட்டம் ஆலயத்திற்கு வன்னி நாட்டின் குறுநில மன்னர்களான வன்னியரின் தலையீடும் ஆதரவும் கிடைத்த காலமாகும்.அம்பாளின் அருட்கருணையில் ஈடுபாடு கொண்ட வன்னி மன்னர்கள் ஆலயப் பொங்கலுக்குத் தேவையான பொருள், மற்றும் உதவிகளைச் செய்தனர். இக்காலத்திலேயே கட்டாடுடையாருக்கும், பொங்கல் பணிகளில் உதவி செய்யவும், ‘குடிமக்கள்’ என வழங்கப்படும் தொழில் அடிப்படையிலான மக்களின் சேவை புகுத்தப்பட்ட தெனலாம். சாதிப்பிரிவைக் கொண்ட வேளாளத் தலைவர்கள் எனச் சரித்திரம் கூறும்.
ஆலயப் பொங்கலில் வரிசை வாத்தியங்கள் புகுத்தப்பட்டதும், பொங்கல் காலத்தில் ‘நோங்புக்காhர்’ என்னும் பயரன் தொண்டு புரியும் பணியாளர்கள் அமர்த்தப்பட்டதும் இவ்வன்னியரசர் காலத்திலேயேயாகும். அதேபோல மன்னரது இராசதானி ஒன்று முள்ளியவளையில் அமைந்திருந்ததனாற், பொங்கல் சம்பந்தமான ஒரு பகுதி நிகழ்ச்சிகள் முள்ளியவளை ஆலயத்தில் நடக்கும்முறை ஆரம்பித்ததும் இவ் வன்னியர் காலத்திலேதான் எனக் கூறலாம். இவ் வன்னி மன்னருள் ஒருவரே ஆலயத்தின் தேவைக்காகப் பெருமளவு நெல்வயலையும் உபகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இக்காலத்திலும் ஆலய பூசை, நிர்வாகம் என்பன கட்டாடுடையாரிடமே இருந்துள்ளது.
பிராமணர் நிர்வாகக் காலம்
வன்னி நாட்டில் வன்னியர்களின் ஆட்சியின் பிற்பகுதியிலே முள்ளியவளையில் பிராமணர்கள் குடியமர்த்தப்பட்டனர். வற்றாப்பளை அம்பாள் ஆலயத்திற்கும் அடியார் தொகை படிப்படியாக அதிகரித்துள்ளது.கமக்காரரான கட்டாடுடையார் ஆலயப் பணிகளை அதிகமாகக் கவனிக்க வேண்டியிருந்ததால் தமது குலத்தொழில் பாதிக்கப்பட்டமையினாலோ அல்லது குடிபுகுந்திருந்த பிராமணரின் வருவாயை அதிகரிப்பதற்காகவோ, வேறு காரணங்களுக்காகவோ, வற்றாப்பளை அம்பாள் ஆலயத்திலும் அந்தணர்கள் பூசைக்கமர்த்தப்பட்டனர்.
படிப்படியாக மக்கள் தொகை அதிகரிக்க, ஆலயத்திலும் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் பூசை செய்யும் முறை கடைப்பிடிக்கப்பட்டது. பொங்கல் நிகழ்ச்சிகளிலும் ஐயரின் பங்குபற்றறுதல் இடம்பெற்றது. ஐயர் பூசை செய்யும் ஆலயமொன்றில் பூசாரியார் முதன்மை பெறுவது முடியாததொன்றுதானே.காலகதியில் பூசைப் பொறுப்புடன் நிர்வாகப் பொறுப்பும் பிராமணர் கையில் சேர்ந்தது. விசேட தினங்களில் மட்டும், வேளை, விபூதி வழங்குவதும், பொங்கல் காலத்தில் தனது கடமைகளைப் புரிவதுமாகப் பூசாரியாரின் உரிமை சுருங்கியது.
பொங்கல் காலத்தில் மட்டும் பூசாரியார் பிரதான பங்கு கொண்டிருந்தார். பழைய வழக்கப்படி தனது வாடிக்கையாளரிடம் பொங்கல் நெல் பெற்று வந்தார். மற்றைய செலவுகளை ஐயர் ஏற்றுச் செய்தார். மக்களும் தாராளமாக உதவிகள் புரிந்தனர்.
பூசைகள், காணிக்கைகள், உபயங்கள், அபிஷேகங்கள், அர்ச்சனைகள், வேளை, விபூதி கொடுத்தல் போன்றவற்றால் வரும் வருமானம் யாவும் ஐயருக்கானது. பூசாரியார் தானும் குறித்த ஓர் இடத்;தில், வெள்ளை விரித்து வேளை, வீபூதியுடன் இருப்பார். இவரிடத்தில் வரும் அரிசி, தேங்காய், வேளை விற்ற பணம் என்வற்றைத் தனது வருமானமாகப் பெற்றார். ஐயர் தனது பணியாளருக்கும், பூசாரியார் தனது குடிமக்களுக்கும் கூலி கொடுத்தார். இக்கொடுப்பனவு யாவும் பொருட்களாகவே நடைபெற்றன. அரிசி, தேங்காய், சட்டி, பானை முதலிய பொருட்கள் வழக்கமாக இடம் பெற்று இருந்தன. பொங்கல் வளந்தும் (பொங்கல்ப்பானை ) ஒரு சூளை சட்டி பானையும் வழங்கும் கடமை குயவனுக்கிருந்தது. கடந்த ஏழு எட்டு ஆண்டுகளுக்கு முன்புகூட இம்முறை நடைமுறையிலிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்விதமாக இரட்டை ஆட்சிக் காலமானது ஆலயத்தைப் பொறுத்தவகையில் நல்ல காலமாகக் கொள்ள முடியவில்லை. ஆலயத்திற்கு அதிக வருமானத்தையும் பெருந்தொகையில் அடியார் வருகையும் தரும் பொங்கல் காலத்தில் ஐயரும் அவரது ஆதரவாளர்களும் ஒருபுறம், பூசாரியாரும் அவரது உறவினரும் இன்னொரு புறமுமாகத் தமது வருமானத்தைப் பெருக்க முனைந்தனரேயன்றி, ஆலய நன்மையைப் பற்றிச் சிந்திக்க அவர்களுக்கு நேரமிருக்கவில்லை. ஐயருக்கும் பூசாரியாருக்கும் வருமானம் தேடுவதில் உதவி செய்பவர்களுள் ஒரு பகுதியினர், சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தித் தமது வருமானத்தைப் பேணுவதற்கே முனைந்தனர். இவ்விதமான குறைகள் மலிந்திருந்த காலத்தில், ஆலயத்தின் கட்டடம் பல ஆண்டுகளைக் கண்டும் புனரமைப்புகள் ஏதுமின்றியிருந்தது. வருமடியார்களுக்குத் தங்குமட வசதியோ, நீர்;வசதியோ வெளிச்ச வசதியோ கிடைக்கவில்லை. இவ்விதம் ஆண்டுகள் பல கடந்தன.
பரிபாலன சபை ஆரம்பம்
அம்பாள் ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை உற்று நோக்கில், அனைத்தும் தெய்வச் செயல்களாகவே நிகழ்ந்துள்ளமையை உணர முடியும். நீக்கப்பட வேண்டியனவும், நீக்கப்பட வேண்டியவர்களும் தாமாகவே நீங்க, சேர வேண்டியனவும், சேர்ப்பிக்கப்பட வேண்டியவர்களும் வலியத் தாமாகவே வந்து சேர்;வதையும் இன்றுவரை காணமுடிகின்றது. இதற்கிணங்கத் தமக்காக வருமாந்தேடும் தனியுரிமைகள், தாமும், தமக்கும் என்நுமுரிமையேது மற்றப் பொது நிருவாகமொன்று ஏற்பமு; ஒரு காலகட்டம் வந்து கூடியது.
ஆலயம் வரும் அடியார்களின் வசதியை முன்னிட்டு ஆலயத்தில் மடம் ஒன்றினை அமைக்க வேண்டுமென்றும் எண்ணம் பலருக்கும் உதிக்கவே வற்றாப்பளையிலும் தண்ணீரூற்றிலுமுள்ள சிலர், முல்லைத்தீவில் வாழ்ந்த முதலியார் திரு. ஆ.சி. கனகசபாபதி து. P. ரு. ஆ. அவர்களின் தலைமையில் அப்போதிருந்த ஆலுய ஐயரிடம் சென்றனர். ஐயரிடம் தமது எண்ணத்தைத் தெரிவித்தவர்கள் வேறொரு எண்ணத்துடன் திரும்பினர். வற்றாப்பளை அம்பாள் ஆலயம் சம்பந்தமாகச் சிந்திக்கவும் செயலாற்றவும் தனக்கும் தெரியுமென்றும், மற்றவர்களுக்கு அவ்வுரிமை இல்லை என்றும், ஐயரின் பதில் கிடைத்ததாம். இதன் தொடர்ச்சியாக வவுனியா அரசாங்க அதிபருக்கும் மகஜர் (பெட்டிசம்) நூற்றுக்கணக்கான கையொப்பங்களுடன் அனுப்பப்பட்டது. 1955 ஆம் ஆண்டு அனுப்பிய இம்மகஜரில், ஆலய உரிமை ஐயர்மாருக்கு இல்லை என்றும், அது சம்பந்தமாக விசாரித்துப் பரிபாலனசபை ஒன்று அமைக்கப்பட வேண்டுமென்றும், வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இக்கோரிக்கைக்கு இணங்க இதுபற்றி விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும் பொருட்டு, மூவரடங்கிய ஆணைக்குழு ஒன்று அரசாங்க அதிபரினால் நியமனம் பெற்றது.
இக்குழு 1956ஆம் ஆண்டு தைமாதம், ஆலயத்துடன் சம்பந்தப்பட்ட ஐயர்மார், பூசாரியர், பணியளர்கள், கிராம முன்னேற்றச் சங்கத் தலைவர்கள், உள்ளராட்சி மன்றத் தலைவர்கள், பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து விசாரணைகளைப் பெற்றுத் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. இவ்வறிக்கையைத் தொடாந்து, அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்ட தீர்மானத்திற்கிணங்க வரையறுக்கப்பட்ட சட்ட திட்டங்களைத் கொண்ட பரிபாலனசபை ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இதன் படி ஆலயத்தினைப் பரிபாலிக்கும் பொறுப்பு பரிபாலன சபைக்குரியதாயிற்று.
வற்றாப்பளை கண்ணகி அம்பாள் கோயில் பரிபாலனசபை
வாக்களார் சபை ( Electoral Roll )
வடமாகாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நல்லொழுக்கமுள்ள 21 வயதுக்கு மேற்பட்ட இந்துக்கள் இவ்வாக்காளர் சபையில் உறுப்பினராக முடியும். வருடாந்தம் ஆடி மாதம் முதலாந்திகதிக்கு முன், பத்து ரூபாவுக்குத் குறையாத தொகையைக் கட்டிப் பற்றுச் சீட்டுப் பெறுவதன் மூலம், உறுப்புரிமையைப் பெறலாம். வருடாந்தப் பொதுக் கூட்டத்pற்கான அழைப்பு தனித்தனியாகக் கடிதமூலம் செயலாளரினால் அறிவிக்கப்படும். குறித்த கூட்டத்துக்குச் சமூகமளித்து, பரிபாலன சபைக்கான 20 உறுப்பினரைத் தெரிவு செய்யும் உரிமை இச்சபைக்குரியது.
பரிபாலன சபை
வாக்காளர் சபையுள், அவர்களினால் தெரிவு செய்யப்பட்ட 20 உறுப்பினரும், நிரந்தர உறுப்பினர்களான 11 உறுப்பினருமாக மொத்தம் 31 பேரைக் கொண்டதே இப் பரிபாலன சபையாகும். தெரிவு செய்யப்படும் 20 பேரும் கரைதுறைப்பற்றை வசிப்பிடமாகக் கொண்டவர்கள். இவர்கள் குறிப்பிட்ட கிராமங்களின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்.
கூட்டம் :
சபையின் கூட்டங்கள் யாவும் ஆலய மடமண்டபத்தில் கூடும். முதல் கட்டத்தில் தலைவர் ஒருவர், இணைச் செயலாளர் ( இருவர்) உப தலைவர் ஒருவர், தனாதிகாரி ஒருவர், கணக்குப் பரிசோதகர் ஒருவர் ஆகியோர் தெரிவு செய்யப்படுவர்.
தலைவர்:
தலைவரே சபையின் உச்ச அதிகாரங்களைக் கொண்ட நிர்வாக உத்தியோகத்தவராவார். கூட்டங்களைத் தலைமை தாங்கி நடாத்துபவர் இவரே. தலைவர் சமூகமளிக்காதவிடத்து, உபதலைவர் இவரது கடமைகளைச் செய்வார்.
இணைச் செயலாளர்கள்.
இணைச் செயலாளரிருவருக்கும் கடமைகள் பிரித்தளிக்கப்படும். ஆனால் ஒருவரில்லாத சமயம் இரு கடமைகளையும் செய்யும் பொறுப்பு இவர்களுக்குண்டு. கூட்டங்களைக் கூட்டுதல், கூட்ட அறிக்கைகள், பிரேரணைகள், சுற்று நிருபங்கள், சட்ட திட்டங்கள் என்பனவற்றிற்குப் பொறுப்பாயிருத்தல், அவற்றைச் சரிவர நிறைவேற்றுதல், சபையினால் காலத்துக்காலம் எடுக்கும் நிர்மானங்களை நடைமுறைப்படுத்தல். கடிதத் தொடர்புகள் வைத்தல், ஆலய நடைமுறைகளை மேற்பார்பை செய்தல், இவர்களது கடமைகளாகும்.
பொருளாளர்.
ஆலய சம்பந்தமான எல்லா வரவு செயலவுகளுக:கும் பொறுப்பானர் இவரே. நிதியங்கள், பொருட்கள் முதலான எல்லா வருமானங்களையும் சேர்த்தல், பாதுகாத்தல், செலவு செய்தல், அவற்றிற்கான சரியான கணக்கு வைத்தல் திருத்திய கணக்கு வைப்பு முறையில் கணக்கறிக்கை வைத்திருத்தல் என்பன இவரின் பொறுப்பாகும்.
கோயில் நிதி நடவடிக்கை
நிதி சம்பந்தமான எல்லாப் பொறுப்பும் பொருளாளருக்குரியது. முலைத்தீவு மக்கள் வங்கியல் பரிபாலன சபையின் பெயரிலுள்ள கணக்கில் பணம் முழுவதும் இடப்படும். கொடுப்பனவுகள் யாவும் காசோலைகள் மூலமே நடைபெறும். வவுச்சர் பத்திரங்களில் பூரணப்படுத்தப்பட்ட கொடுப்பனவுகள் செயலாளரினால் சிபார்சு செய்யப்பட்ட பின்பே பணம் வழங்கப்படும். காசோலைகள் பொருளாளரினதுமு;, தலைவர் அல்லது செயலாளரினதும் கையொப்பமிடப்படும் பொங்கல் காலத்தில் ரூபா 3000ஃஸ்ரீ மும், சாதாரண காலத்தில் ரூபா 500ஃஸ்ரீ உம் அல்லது இவற்றிற்குக் குறைவான தொகையினையே பொருளாளர் கையிருப்பாக வைத்திருக்க முடியும்.
அன்பளிப்புகளும் உபயங்களும்
ஆலயத்துக்கு அடியார்களினால் வழங்கப்படும் அன்பளிப்புக்கள், உபயங்கள் எல்லாவற்றிற்கும் உரிய முறைப்படியினாலான பற்றுச் சீட்டு வழங்கப்பட வேண்டும். பற்றுச் சீட்டுக்களின்றி எந்த விதப் பொருட்களையும் பெற முடியாது.
பூசாhரியார், ஐயர், முகாமையாளர், பிற ஊழியர்கள்.
ஆலயக் கிருத்தியங்களையும், கடமைகளையும் நிறைவேற்றும் பொருட்டு மேற்குறிப்பிட்ட சேவையாளர்களை நியமிக்கவும், அவர்களின் செயல்கள் பற்றி மேற்பார்வை செய்யவும், விசாரணை செய்யவும், நிதி வழங்கவும், தவறுகள் புரியின் வேலை நீக்கம் செய்யும், இவர்களுக்கான சம்பளத்தினைக் காலத்துக்குக் காலம் ஏற்றபடி வழங்கவும் பரிபாலன சபைக்கு அதிகாரமுண்டு.
பொது
பரிபாலன சபைக் கூட்டம் கூட்டுதற்கான கோரம் 10 ஆகும். வாக்காளர் சபையிலுள்ள 10க்குக் குறையாத அங்கத்தவர்கள் எழுத்துமூலம் கோருமிடத்து, விசேட கூட்டமொன்றினைக் கூட்டும் நடவடிக்கையைச் செயலாளர் மேற்கொள்ள வேண்டும். சாதாரண அங்கத்தவரொருவர் விலகிக் கொண்டால், வாக்காளர் சபையிலிருந்து புதியவர் ஒருவர் அங்கத்தவராகத் தெரிவு செய்யப்படுவர். மூன்று தொடர்ச்சியான கூட்டங்களுக்குச் சமூகமளிக்காத சாதாரண அங்கத்தவர், தனது அங்கத்துவத்தை இழப்பர். மூன்று வருடாந்தப் பொதுக் கூட்டங்களுக்கும் தொடர்ச்சியாகச் சமூகமளிக்காத நிரந்தர உறுப்பினர் ஒருவர், பதவியை இழப்பர். இவரது உரிமை அடுத்த உரிமையாளருக்குச் சேரும். தவறான நடவடிக்கையில் ஈடுபடுமு; அங்கத்தவர், ஒருவர்பற்றி விசாரணை செய்து தேவையானால் நீக்குமதிகாரம் பரிபாலன சபைக்குரியது. ஒன்றுக்கு மேற்பட்ட பிரேரணைகள் வருமிடத்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டு அதிகப்படியான வாக்குகளால் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அத்துடன் நிரந்தர உறுப்பினர் 11 பேருள் அதிகப் படியானோரின் ஆதரவு பெறாத தீர்மானங்கள் நடைமுறைப்படுத்த முடியாதவையாகும்.
நன்றி
கடந்த இருபதாண்டுகளுக்கு மேலாக ஆலயத்தினைப் பரிபாலித்து வரும் பரிபாலன சபையானது, பலரினது நன்மதிப்பினையும், பக்தர்களின் நம்பிக்கையையும் பெற்று வருவதற்கான காரணம், ஆலயத்தின் நிதி சம்பந்தமாகச் சரியான நடைமுறை இருப்பதும் பலதரப்பட்ட மக்களினது ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைப்பதுமேயாகும்.
இவ்விதமான சபையொன்றினைத் தோற்றுவிக்க உதவியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கடமை எமக்குண்டு.
ஆலய வளர்ச்சியில் கருத்துக் கொண்டு, ஐயர் காலத்திலிருந்தே உழைத்தவரும், பரிபாலன சபையின் தோற்றத்துக்குப் பாடுபட்டவரும், ஆரம்ப காலத் தலைவருமான முதலியார் திருவாளர் ஆ.மு கனகசபாபதியவர்களுக:கு எமது நன்றியைத் தெரிவிப்பது கடமையாகும். சபையின் நீண்;ட காலத் தலைவரும் ஆலய உரிமை சம்பந்தமான கோடு நடவடிக்கைகளில், பரிபாலன சபைக்காக உழைத்தவரும் பலரின் எதிர்ப்புக்களையும் துணிகரமாக எதிர்த்து நின்று வெற்றி பெற்றவருமான, சட்டத்தரணி தம்பையா முதலியார் சபாரத்தினம் அவர்களுக்கும் எமது மனமார்ந்த னநற உரித்தாகுக.
ஆரம்ப காலத்தில் உரிமையையும் வருவாயையும் பெற்று வநடட பூசாரியார் குடும்பத்தினர், தமது உரிமையையும் வருவாயையும் ஆலயத்துக்காக விட்டுக் கொடுக்க முன்வந்து, பரிபாலன சபைக்கு இன்றுவரை ஒத்துழைப்பு நல்கி வருகின்றார். அத்துடன் கட்டாடுடையார் குடும்பத்தினைச் சேர்ந்த வற்றாப்பழையின் காலஞ் சென்ற கதிர்காமர் பொன்னையா அவர்கள் தம்மாலியன்ற பணிகள் மூலம் பரிபாலன சபையைத் தோற்றுவிக்க உதவியராவர். அவர்களுக்கும் எமது னநற உரித்தாகுக.
பரிபாலன சபை ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப ஆண்டுகளில் ஐயர் ஆதரவாளருக்கும், ஏனையோருக்குமிடையில் நேரடியான மோதல்கள் கூட நடைபெறும் சந்தர்ப்பங்கள் கிட்டின. இந்தச் சந்தர்ப்பங்களிலெல்லாம் தோளோடு தோள் கொடுத்துதவிய பொது மக்கள் பலருக்கும் குறிப்பாகப் பல ஆண்டுகள் பரிபாலனசபைக் காரியதரிசியாக இருந்த திரு. சி. வினாசித்தம்பி அவர்கள் திரு. தா. நடேசபிள்ளையவர்கள், திரு.க. பொன்னையா அவர்கள், வவுனியாவின் தற்போதைய தேசிய அரசுப் பேரவை உறுப்பினர் திரு. தா. சிவசிதம்பரம் அவர்கள், முள்ளியவளை திரு. க பொன்னம்பலம் அவர்கள் ஆகியோர் எமது நன்றிக்குரியவர்களாவர். அத்துடன் பரிபாலன சபையின் தோற்றத்திற்காகவும் ,வளர்ச்சிக் காகவும் பல்வேறு கிராமங்களிலிருந்து ஆதரவு கொடுத்துதவிய பொது மக்களும் அரச ஊழியர்களும் எமது மனமாந்த்த நன்றிக்குரியவர்களாவர்.
வளர்ச்சிபடிகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது இயல்பானதே.
அம்பாள் ஈழ நாட்டின் பத்தாம் பதியாகிய வற்றாப்ளையில் மாடு மேய்த்த சிறுவர்களுக்குக் காட்சி கொடுத்த காலம் தொடக்கம் இன்றுவரை ஆலயம் நிர்வகிக்கபட்ட வழிகளையும்நிர்வாகசபையின் தோற்றம், கட்டுப்பாடு, கடமைகள், என்பவற்றையும் சுருக்கமாக விளக்கமுயல்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.ஆரம்பத்தில் ஆலயம் அமைந்துள்ள இடமானது இருபக்கம் நந்திகடலும் மற்றிரு பக்கம் காடும், நீரூற்றுக்களும், புல் நிலங்களும் அமைந்ததொரு அமைதியான தனியிடமாகவே இருந்துள்ளது. ஏறக்குறைய இரண்டு மைல் தூரத்துக்கப்பாலேயே மக்கள் குடியிருப்புகள் அமைந்தன.
வருடாந்தம் நடைபெறும் பொங்கல் நிகழ்ச்சியும், மக்கள் தாம் வைத்த நேர்த்திகடன்க நிறைவேற்றச் செய்வித்த பூசை ,மடை, மண்டகபடி,குளிர்த்தி என்பன அக்காலத்தில் நடைபெற்ற ஆலய நிகழ்சிகளாகும்.
“கட்டுடையார்” என அழைக்கப்பெரும் பூசாரியரே இக்காலத்தில் ஆலயபூசைகள், நிர்வாகங்கள் எல்லாவற்றுக்கும் பொறுப்பாய் இருந்துள்ளார். பொங்கலுக்குத்தேவையான நெல், தேங்காய், பழம், பாக்கு, வெற்றிலை, பால், நெய், போன்ற எல்லாப்பொருட்களும் வற்றாப்ளையிலும் முள்ளியவளை, தண்ணீரூற்று முல்லைதீவு போன்ற அயற் கிராமங்களிலும் வாழ்ந்த வசதிபடைத்த கமகாரரிடமிருந்து பெற்றுள்ளனர்.
இவ்வழக்கத்தின் அடிப்படையிலேயே, மிக அண்மைக்காலதில்கூட ஒரு சில கமக்காரர், பூசாரியிடம் பொங்கல் நெல் ஒப்படைக்கும் முறை இருந்து வந்துள்ளது என அறிய வந்துள்ளது. கிராம மக்களுக்கு நோய்கள் காணும்போது அவற்றிற்கெல்லாம், பூசாரியார் கொடுக்கும் வேளை (மஞ்சள் தேய்த்துப் பூசையில் வைத்த சீலை ) வீபூதி, தீர்த்தம் என்பனவே மருந்தாக உதவின. இதனால் சமூகத்தில் உயந்ததொரு இடத்தினைப் பூசாரியார் பெற்றுக் கொண்டதுடன் ஆலய நிர்வகதினையும் நடத்தித் தேவையான பொருளுதவிகளையும் பெற்றுக் கொண்டர். இவ்விதம் வேளை, வீபூதி முதலியன கொடுக்கும் வழக்கம் ஆலயத்தில் இன்று கடைப்பிடிக்கபட்டு வருவது குறிப்பிடத்தக்கது .
எனவே இக்கலத்தில் ஆலயம் சம்பதமான எல்லாக் கடமைகளும், நிருவாக அதிகாரமும் பூசரிக்கே உரியதாகியிருந்துள்ளது.
மிகுதி விரைவில் தொடரும்………
தாயத்தெய்வ வழிபாட்டு முறை பண்டு தொட்டு இருந்து வந்திருக்கின்றது. இதனாலேதான் பெண் தெய்வங்களும் அவற்றின் வழிபாட்டு முறைகளும் மிகக் கூடுதலான இடத்தினை அம்மக்களிடையே பெற்றுக்கொண்டுள்ளன. மரபு வழியாகவே பெண்ணைத்தெய்வமாகவும் தெய்வத்தைப்பெண்ணாகவும் கொண்டு வணங்கும் முறை திராவிடரிடையே வேரூண்றிப் பரவுவதற்க்கும் தாய்த்தெய்வ வழிபாட்டு முறையே காரணமாய் இருந்திருக்க வேண்டும். திராவிடப் பண்பாடும் ஆரியப்பண்பாடும் கலந்தும் உருவான இந்து சமயத்திலே தாய்த்தெய்வ வழிபாடு அல்லது சக்தி வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது. சக்தியின் அம்சமாகவே ஏனைய பெண் தெய்வங்கள் யாவும் தோற்றம் பெறுகின்றன.கொற்றவை, மாரி, ஜயை போன்ற பெண் தெய்வங்கள் யாவும் சக்தியின் அவதாரமாகவே கற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. இந்நிலையிலேதான் கற்புக்கடம் பூண்ட பொற்புடைத் தெய்வமாம் கண்ணகிக்கும் வழிபாடு தோண்றியிருக்கவேண்டும்.
கண்ணகி கதை பற்றி நாம் அறிந்து கொள்ள மிக முக்கிமானதும் மிகப்பழமை பொருந்தியதுமான ஆதாரம் சிலப்பதிகாரமே. இளங்கோவடிகள் கண்ணகி வரலாற்றுக்குக் காவிய வடிவம் கொடுப்பதற்க்கு முன்பே பண்டைக்கால மக்களிடையே இக்கண்ணகி கதை மரபுகள் வழங்கி வந்துள்ளன என்பதற்குச் சான்றுகள் உள! இதனை நாம் அறிந்கொள்ள நற்றணைப் பாடல் ஒன்றும் புறநானூற்றுப் பாடல்கள் சிலவும் துணை செய்கின்றன. இவ்வாறு மரபு வழியாக இருந்து வந்த கண்ணகி பற்றிய கதைகளே சிலப்பதிகாரத்தைக் காவிய வடிவமாக எழுதி முடிப்பதற்க்கு இளங்கோவடிகளுக்கு உதவியிருக்க வேண்டும்.
சிலப்பதிகாரத்திற் பொதிந்துள்ள பல கதைகள் தமிழகப்பகுதிகளிலே பொதுமக்களால் வில்லுப்பாட்டாகவும், மலையாளப்பகுதிகளில் அம்மானை உருவத்தில் நாடோடிப்பாடல்களாகவும் பாடப்பட்டு வந்துள்ளன. புகழேந்திப்புலவர் இயற்றியதாகக் கொள்ளப்படும கோவலன் கதை அம்மானை உருவத்திலே பாடப்படுள்ளது. அடீத போலக் கோவலன் கதைபற்றி மலையாள நாட்டில் வழங்குவதும் தமிழ் மொழியில் அமைந்ததுமான காதற்பிரபந்தம் ஒன்ற உண்டு எனவும் அறிய முடிகின்றது.
தமிழகத்திற் சிலப்பதிகார காலத்தில் இருந்து கொற்றவை கண்ணகியாக வணங்கப்பட்டிருக்க வேண்டும். சிலப்பதிகாரத்தின் வழக்குரை கதையிலே பொற்றவை, காளி என்னும் தெய்வங்களோடு கண்ணகியின் தோற்றம் ஒப்பீடு செய்யப்பட்டிருப்பது இதற்குச் சான்றாக அமைகின்றது. எனவே சிலப்பதிகார காலத்தில் இருந்து கொற்றவை , காளி ஆகிய தெய்வங்களின் அம்சங்கள் கண்ணகியோடு சேர்க்கப்பட்டும் கண்ணகி வழிபாடு தோற்றம் பெற்றிருக்கலாம்.
சேரன் செங்குட்டுவன் சேர நாட்டிற் கண்ணகிக்கு விழாவெடுத்தபோது கடல் சூழ் இலங்கைக்கயவாகு வேந்தனும் சென்று சிறப்பித்தான் எனச் சிலப்பதிகார உரைபெறு கட்டுரையும் வரந்தருகாதையும் கூறியுள்ளன. இது போலவே பாண்டியன் வெற்றிவேல் செழியனும் சோழன் பெருங்கிள்ளியும் கொங்கிளக்கோசரும் மாளுவ வேந்தரும் கண்ணகி விழாவிற் பங்கு கொண்டு தத்தம் நாடுகளுக்கும் கண்ணகியை எழுந்தருளுமாறு வேண்டி நின்றனர்.
இவ்வாறு தத்தம் நாடுகளுக்கு எழுந்தருழுமாறு வேண்டிய அரசர்களில் ஒருவனாகிய கயவாகு வேந்தனே இவ்வழிபாடு ஈழத்திற் பரவி வேரூன்றக் காரணமாயிருந்தான். இதனை ஈழத்து வரலாற்று நூலான இராஜரத்னாகரவும் கஐபாகத்தாவ என்னும் பத்தினி வரலாறு கூறும் சிங்கள நூலும் குறிப்பிடுகின்றன. எனினும் இராஜாவலிய சிலப்பதிகாரக் கதையினின்றும் சிறிது வேறபட்ட கதையினையே கூறியுள்ளது. இதன் மூலம் கஐபாகு பத்தினித் தெய்வத்தின் சிலம்பையும் நான்கு கோயில்களின் தெய்வங்களையும் ஆயுதச் சின்னங்னளையும் வரவழைத்துப் பெற்றுக்கொண்டு வாலகம்பாகு காலத்தில் எடுத்துச் செல்லப்பட்டிருந்த புனிதப் பாத்திரத்தையும் பெற்றுக்கொண்டு ஈழம் மீண்டான் என அறிய முடிகின்றது. இச் செய்திகளிற் சிலவற்றைக் கோகில சந்தேச நூலும் கூறும். எனவே கயவாகுவே ஈழத்திற் கண்ணகி வழிபாடு தோன்றி வளர்ச்சி பெறக் காரணமாயிருந்தான் எனக் கூறலாம்.
கண்ணகி வழிபாடு ஈழத்துக்குக் கொண்டுவரப்பட்டதும் அது சிங்கள, தமிழ் மக்களிடையே நிலைத்து வளரலாயிற்று. திமிழ் மக்களிடையே கண்ணகி வழிபாடெனவும் கண்ணகை அம்மன் வழிபாடெனவும் வளர்ச்சி பெற்ற போது, அது சிங்ஙகள மக்களிடையே பத்தினி வழிபாடாக மலர்ந்தது. இதனாலே தமிழில் உள்ள கண்ணகியைத் தலைவியாகக் கொண்ட இலக்கியங்களைப் கோலச் சிங்களத்திலும் பல பத்தினி காவியங்கள் தோன்றலாயின. புத்தினிஹல்ல, பாளங்கஹல்ல, பத்தினி கத்தாவ , பத்தினி விலாபய, கயபாகத்தாவ, வயந்தி மாலா, அம்ப பத்தினி உபத, அம்பவிதுமன, மல்பத்தினி உபத, மாதேவி கத்தாவ, பத்தினி யாதின்ன, பத்தினி பிளிம, பத்தினி கோள்முற, பாளாங்க மறுவீமே சிந்தவ, பண்டி நெத்த மெகு உபத்த, அங்கெலி உபத்த, சலம்ப கத்தாவ முதலிய சிங்கள்ப் பத்தினி இலக்கியங்கள் இதற்குச் சன்றாகும்.
ஈழத்துக்கு இவ்வழிபாட்டைக் கொண்டு வந்த கயவாகு வேந்தன் ஆடிமாதந்தோறும் தலைநகரிற் பத்தினிக்குப் பெருவிழா எடுத்துப் பத்தினியின் காற்சிலம்பை யானையில் ஏற்றி ஊர்வலமாகக் கொண்டு சென்று பெருவிழா கொண்டாடினான். இந்த யானை ஊர்வலம் பண்டு தொட்டு இன்றுவரை சேரநாட்டின் எல்லப்பகுதிகளிலும் உற்சவ காலங்களில் வழங்கி வருதல் குறிப்பிடத்தக்கது. கயவாகு மன்னன் கண்ணகி விழாவிற் கலந்து திரும்பி வந்த போது அதே றையைத்தான் பின்பற்றினான் எனக்கருத வேண்டியுள்ளது. இது கண்டி மாநகரில் நடைபெறும் எசல பெரஹராவின் ஆரம்பமாய் இருக்கலாம் எனக் கலாயோகி ஆனந்த குமாரசுவாமி தனது ‘மத்தியகாலத்துச் சிங்களக்கலை’ என்னும் நூலிற் கூறிப்போந்தார். ‘ஆடித்திங்களகவையினாங் கோடி பாடி விழா’ பற்றிச் சிலப்பதிகாரம் கூறுவதும் ஆடி ஆவணி மாதங்களில் எசல பெரஹரா நடைபெறுவதும் சான்றாக அமைகின்றது.
புத்தினி வழிபாடு சிங்கள மக்களிடையே சமய வாழ்வில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கின்றது. இத் தெய்வத்தினைத் தொற்று நோய்களின், அதாவது அம்மை, சின்னமுத்து, பொக்குளிப்பான் போன்ற நோய்களின் அதிதேவதையாக அவர்கள் கொள்ளதோடு கண்ணகியைத் துர்க்கையாகவும் எட்டுக் காளிகள் சூழ்திருக்கும் ஈழத்தின் காவற் தெய்வமும் இதுவே. எனக்கொள்வர். இது சம்பந்தமான ஜதீகங்கள் பல சிங்கள மக்களிடையே இன்றும் நிலவி வருகின்றன. நிக்கவவக் குகையிற் கண்டெடுக்கப்பட்ட சந்தணக்கட்டையாலான கண்ணகை, கோவலன் சிலைகள் கயவாகு மன்னனால் கொண்டுவரப்பட்டதாய் இருக்கலாம். என ஹென்றி பார்க்கர் கருதுகின்றார்.
முல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளைக் கிராமத்தில் எழுந்தருளி அருட்கடாச்சம் வழங்கிக் கொண்டிருக்கின்ற கண்ணகை அம்மன் ஆலய இணையத் தளம் ஒன்றினை உலகெங்கும் பரந்து வாழுகின்ற கண்ணகி அடியார்களின் முன் கொண்டுவருவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம். இந்த இணையத்தளத்தின் மூலமாக வற்றாப்பளைக் கண்ணகி ஆலயத்தில் வருடா வருடம் நடைபெறுகின்ற நிகழ்வுகளை ஒளிப்படங்களாகவும், புகைப்படங்களாகவும், கட்டுரைகளாகவும், கவிதைகளாகவும் நேர்காணலாகவும் அவ்வப்போது தருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றினை உலகெங்கும் பரந்து வாழும் அடியார்கள் பார்த்துப் பயனடையலாம். மேலும் இவ் இணையத்தளமானது வெளிநாடுகளில் வாழுகின்ற அடியார்களது நன்மைகள் கருதியும் உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் உங்களது கோவிற் கடமைகளைச் செய்வதற்கும், நேர்த்திக்கடன்களை நிறைவாக்குவதற்கும், வற்றப்பளைச் சந்நிதானத்தில் இருந்து திருநீறு, குங்குமம், சந்தனம், வேளை போன்ற பிரசாதங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் தரப்பட்டுள்ள தொடர்பு இலங்கங்களுடனோ, அல்லது மின்னஞ்சலுடனோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். வெளிநாடுகளில் இருந்து வற்றாப்பளைச் சந்நிதானத்திற்குத் தரிசனத்திற்காகச் செல்பவர்கள் வற்றாப்பளைக் கோவிலின் சுற்றாடலிலேயே தங்கியிருந்து தரிசனம் செய்வதற்கு வசதியாக தங்குமிட வசதிகள் செய்து கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனவே தாங்கள் கண்ணகை அம்மன் ஆலயத்துடன் ஒரு மாதத்திற்கு முன்பாகத் தொடர்பு கொண்டால் இந்த ஒழுங்குகள் தங்களுக்குரிய முறையில் செய்து தரப்படும் என்பதனைத் தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.’ஆலய தரிசனம் கோடி புண்ணியம் அம்மன் தரிசம் ஆத்ம புண்ணியம்.’ வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் அறங்காவற்சபை. வற்றாப்பளை.தொடர்புகளுக்கு:தொலைபேசி:+94-24 3243558 மின்னஞ்சல் : info@vattappalaikannaki.com |