Home வரலாறு வற்றாப்பளைக் கண்ணகித் தெய்வமும், ஆலயமும்

வற்றாப்பளைக் கண்ணகித் தெய்வமும், ஆலயமும்

இமயத்திற் கல்லெடுத்துக் கங்கையிலே நீராட்டிக் கனவிஜயர் தலையிலேற்றிக் கண்ணகிக்கு விழா எடுத்த சேரன் செங்கொட்டுவனோடும், விழாவுக்குச் சென்ற கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனுடனும் கண்ணகி வழிபாட்டினைத் தொடர்புபடுத்துதல் வழமை. கண்டியில் தலதா மாளிகைக் கணித்தாய் கண்ணகி ஆலயம் அமைந்திருப்பதும் ஷபெரகரா|வில் யானைமீது கண்ணகி சிலை எடுத்துச் செல்லப்படுவதும் இவ்வழமைக் கருத்திற்கேற்றதே. ஆனால் தாhகவே வற்றாப்பளைக்கு வந்ததும், நந்திக் கடற்கரையில் பட்டபடவாளில் வீற்றிருந்ததுவும், மாட்டிடையர் கண்ணில் வெள்பிபட்டதுவும், அவர்களின் பொங்கல் மடையேற்றருள் செய்ததும், கடல் நீரில் விளக்கேற்றியதும், பட்டபடவாள் தளிர்விட்டு வளர்ந்ததும், பனிச்சை மரத்தினை ஆட்டிப் பறங்கியைத் துரத்தியதும், வற்றாப்பளைக் கண்ணகி அம்மனின் ஆரம்பகால வரலாறு ஆகும்.
ஷஷமயானம் நோக்கிய சிவாலயங்களும், நீர் நிலை நோக்கிய சக்தி தலங்களும் அருட்சக்தி மிக்கவை|| என்பது ஆன்றோர் கருத்து. நந்திக்கடல் நீர்ப்பரப்பை நோக்கியிருந்து அருள்பாலிக்கும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு வருகை தந்து, ஆண்டுதோறும் தம் மனக்குறை தீர்க்கும் அடியார்தொகை இக்கருத்தினை மேலும் வலுவூட்டுகின்றது.
பெண் தெய்வ வழிபாடு இந்துக்களுக்கே சிறப்பானது. இலங்கையின் சக்தி தலங்களுக்குள் பெரும்பாலானவை கண்ணகித் தெய்வத்தலங்களே. ஆனால் வழிபாட்டுமுறை கிராமிய முறையினின்று மாறுபட்டதால் கண்ணகி ஆலயங்கள் பல தமது முதல் நாமத்தையே மாற்றிக் கொண்டன. வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயத்திலும் ஷகால ஒடடத்துடன் ஒட்டிப் போக வேண்டிய நிலை இயல்பானது| என்பதற்கேற்ப நித்திய, நைமித்திய பூஜை வழிபாடுகளை ஆகம முறைப்படி பிராமணக் குருக்களே செய்து வருகின்றார். ஆனால் கிராமியச் சிறுவர்கட்குக் காட்சி கொடுத்த தினமான வைகாசி மாதம் பூரணையினையும், விசாக நட்சத்திரத்தினையும் மிக அண்மித்த திங்கட்கிழமையில் நடைபெறும் வருடாந்தப் பொங்கல் வழிபாடு கிராமிய முறைப்படியே நடைபெறுகின்றது. இந்நிகழ்வல் கட்டாடியுடையார் மரபைச் சேர்ந்த ஷஷபூசாரியார்|| பிரதான பாகமேற்கின்றார். அத்துடன் பரம்பரை வழிவந்த ஐயர், தீர்த்தம் எடுப்பவர், தீபமேற்றிப் பாதுகாப்பவர், வெள்ளை கட்டுவோர், உடை தூய்மையாக்கிக் கொடுப்பவர், பறை முழக்கம் செய்வோர், மட்பாத்திரம் செய்வோர், கடலில் தீர்த்தமெடுக்க உதவுவோர் ஆகியோர் தத்தமது கடமைகளைச் செய்துதவுகின்றனர்.
பாக்குத்தெண்டல், தீர்த்தமெடுத்தல், விளக்கேற்றல், மடை வைத்தல், தூளி பிடித்தல், கச்சுநேருதல், வளந்து நேருதல், பொங்குதல், அம்மானை ஆடல், உடுக்கடித்தல், சிந்து பாடுதல், குளிர்த்தி பாடுதல், பரிகலம் வழிவிடுதல்,, பத்தஞானி பொங்கல் ஆகிய பொங்கல் கிரியைகள் இக்காலத்தில் நடைபெறும். இவற்றுக்காகப் பட்டு, உடுக்கு. முரசுப்பறை, வெள்ளிப்பிரம்பு, சிலம்பு, அம்மானைக்காய், வளந்து நூல், வெற்றிலை, பாக்கு, அரிசி என்றும் பொருட்கள் எடுத்தாளப்படுகின்றன.
வற்றாப்பளை அம்மனின் அருளும் கருணையும் வேண்டி இலங்கைத்தீவின் எல்லாப் பகுதியிலிருந்தும், இந்துக்கள் மட்டுமன்றி பௌத்தர்களும் ஏனைய மதத்தினரும் மொழி,இன,மத வேறுபாடின்றிப் பெருமளவில் வருகைதந்து வழிபட்டு அருள் பெறுகின்றனர். இலங்கையில் மட்டுமன்றித் தமிழ்நாட்டிலும், கனடா, மலேசியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழும் எம் மக்கள் அம்மனை வழிபடுவதுடன் பொங்கல் தினத்தினையும், விழாவாக நடத்தி வருகின்றனர். எமது ஆலயத்திற்கும் தம்மாலான பொருளுதவியையும் செய்து வருகின்றனர்.
எல்லார் மனத்திலும் எள்ளில் எண்ணெய் போல் இருந்தருள்புரியும் எம்மன்னையின் பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் உள்ளங்களில், சிறப்பாக இந்துப் பெருமக்கள் உள்ளந்தோறும் நறுமணம் பரப்பி நன்மதிப்பைப் பெற்றுலாவரும் ஷஷசைவநீதி|| மாத இதிழ் மூலம் எமது செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் ஆத்ம திருப்தியடைகின்றோம்.
பூசாரியார் பரம்பரையினராலும், தொடர்ந்து பிராமணர் பரம்பரையினராலும் நிருவகிக்கப்பட்டு வந்த இவ்வாலயம் 1958ஆம் ஆண்டு தொடக்கம் பொதுமக்களின் பங்களிப்புடன் பரிபாலனசபை அமைக்கப்பட்டு அச்சபை மூலம் பரிபாலிக்கப்பட்டு வருகின்றது. 31 உறுப்பினர்களைக் கொண்ட பரிபாலனசபையில் ஆலயத்துடன் தொடர்புடைய குடும்பங்களிலிருந்து நியமனம் பெற்ற 11 உறுப்பனிர்கள் அல்லது அவர்களது உரிமையாளர்கள், நிரந்தர உறுப்பினர்களாகவும் சூழவுள்ள 7 கிராமங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 20 உறுப்பினர்களுமாக மொத்தம் 31 உறுப்பினர்கள் அடங்குவர்.
குடந்த 18 ஆண்டுகளுக்கு மேலாக எமது பகுதியில் ஏற்பட்ட யுத்தச் சூழலினாலும் முல்லைத்தீவு இராணுவமுகாமிற்கு மிக அண்மையில் அமைந்திருந்ததாலும் முல்லைத்தீவு, தண்ணீரூற்று, முள்ளியவளை, வற்றாப்பளை கிராமங்களின் மக்கள் பலர் இடம்பெயர்ந்து தூர இடங்களிலும், தூர நாடுகளிலும் குடியேறி உள்ளனர். இதனால் நிரந்தர உறுப்பினர்களின் தொகையில் வீழ்ச்சியேற்பட்டுள்ளது. அதேபோல மிகுந்த பாதுகாப்புக்கும் பெருமைக்கும் உரியதாக மதிக்கப்பட்டு வந்த அம்மன் ஆலயத்தின் மீது முதன் முதல் இந்திய இராணுவத்தினர் 02.11.1987 அன்று எறிகணைகளை வீசினர். சுமயச்சார்பற்ற நாடான இந்திய இராணுவத்தின் புரிந்துணர்வற்ற இச்செயலால் ஆலயத்தில் தஞ்சமடைந்திருந்த மக்கள் 8 பேர் வரை மணரமடைந்தனர். இதனைப் பின்பற்றி இலங்கை இராணுவத்தினரும் ஆலயத்தின் மீது எறிகணைகளை வீசத்தொடங்கினர். 1992ஆம் ஆண்டு பொங்கல் தினமான 18.05.1992 அன்று ஆலயத்தின் துவிச்சக்கரவண்டிப் பாதுகாப்பு நிலையத்திலும், அதன் சுற்றாடலிலும் எறிகணைகளை வீசியதால் 23 அப்பாவிப் பொதுமக்கள் மரணமாயினர். இது போன்றே தொடர்ச்சியாக 1996ஆம் ஆண்டு முல்லைத்தீவு இராணுவமுகாம் அகற்றப்படும் வரை ஆலயமும் சூழலும் பலத்த சேதத்துக்குள்ளாயின. ஆலயக்கூரைகள், இராஜகோபுரம், மூலஸ்தானத்தூபி, மண்டபங்கள், கலையரங்கு, மடங்கள், குருக்கள் வீடு, முகாமையாளர் வீடு, நோற்பாளர் தங்குமிடம் என்பன சேதமாக்கப்பட்டும், முற்றாகத் தரைமட்டமாக்கப்பட்டும் விட்டன.
ஆலயத்தின் மஞ்சமும், வாகனங்களும் முற்றாக அழிந்தன. ஆலயத்தின் உள்மண்டபங்கள் அவ்வப்போது திருத்தப்பட்டுக் கும்பாபிNஷகமும் செய்யப்பட்டு அடியார்களின் வணக்கத்திற்கு வசதி செய்யப்பட்டது. அதேபோல் அழிந்த மஞ்சத்திற்குப் பதிலாக புதிய மஞ்சமொன்றைச் செய்யும் முகமாக 1999ஆம் ஆண்டு பூர்வாங்கப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 2001ஆம் ஆண்டு பங்குனி மாதம் வரை செய்து முடிக்கப்பட்டது. 06.04.2001 அன்று வெள்ளோட்டம் விடப்பட்டது. மஞ்சம் விடுவதற்கான மஞ்சமுட்டி வேலைக்காக ஒரு பைக்கற் சீமெந்தினை ரூபா நாலாயிரத்துக்கு பெற வேண்டிய நிலையில் இப்பணி நிறைவேற்றியுள்ளது என்பதைத் தெரிவிப்பதன் மூலம் வன்னியில் பொருளாதாரத்தடை எத்தன்மைய விளைவை ஏற்படுத்தியதென்பதை வெளிப்படுத்துகிறோம்.
இவ்வித சூழ்நிலையில் இருந்த நாம் 2001-12.05 திகதி நடைபெற்ற ஸ்ரீலங்காவின் தேர்தலின் பின் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தினால் ஓரளவு இயல்பு நிலையை நோக்கிப் பயணிக்கின்றோம்.

1. பூரணப்படுத்தப்படாத இராஜகோபுரம் பல உடைவுகளுடன், 1990 ஆம் ஆண்டு தொடக்கம் குறையாக உள்ளது. இதனைப் பூரணப்படுத்துவதற்கு முன்னுரிமைப்படுத்த வேண்டியுள்ளது.
அதே போல,
2. மூலஸ்தானத்தூபி திருத்தம் செய்து வர்ணம் பூசுவதுடன் புனராவர்த்தன கும்பாபிN!கம் செய்ய வேண்டியுள்ளது.
3. முற்றாக அழிந்த நிலையிலுள்ள குருக்கள் வீடும், முகாமையாளர் வீடும் கட்ட வேண்டிய நிலையுள்ளது.
4. சுமூக முன்னேற்றத்தினைக் கருத்திற்கொண்டு ஆலயத்தில் நூல் நிலையம் ஒன்றினை அமைப்பதற்கான ஆயத்தம் நடைபெறுகின்றது. ஒரு தொகுதி நூல் கௌ;வனவு செய்யப்பட்டது. இதற்கான கட்டட தளபாட வசதிகள் செய்யப் பெற்று நடைமுறைப்படுத்தவுள்ளோம்.
5. யுத்தத்தின் பக்க விளைவாக எமது பகுதியில் வறுமைநிலை மேலோங்கியுள்ளது. பாதிப்படைந்த குடும்பங்கள் பல தம் குழந்தைகட்குக் கல்வி கற்பிக்க நாதியற்றுள்ளனர். இதனைக் கருத்திற்கொண்டு உடை, உணவு வசதியுடன் சகல நவீன தேவைகளும் கிடைக்கச் செய்யக் கூடியதான முன்பள்ளி ஒன்றினை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
6. ஆலயங்களில் சுவைபடப் பண்ணிசை ஓதவும், திருமுறைகளின் பெருமையும், பொருளும் விளங்கவும் மாணவர் மத்தியில் அறிவினைப் பெருக்குமுகமாக மாணவர் மத்தியில் திருமுறை ஓதும் பயிற்சியும், ஆண்டுதோறும் திருமுறையோதற் போட்டியும் வைத்துப் பரிசளித்து ஊக்கமளிக்கின்றோம்.

இம்முயற்சிகள் நல்லபடி நிறைவேறவும், நொந்துபோயுள்ள எமது நாட்டு மக்கள் மேன்மையோடு வாழவும் நாட்டில் சாந்தியும் சமாதானமும் நிலவ அன்னையருள் வேண்டி, எமது முயற்சிகளில் நல்லெண்ணமும், நம்பிக்கையும் கொண்ட அன்பர்களின் ஆலோசனையும் ஆதரவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

நடராஜர்

உலக சமயங்களிலே அநாதியான மெய்ச் சமயமாக விளங்குவது சைவசமயம் ஆகும். உலகின் முதல் மக்கள் வாழ்க்கை நாகரிகம் என அறிந்தவற்றுள் சிந்துவெளி சாகரிகமே தொன்மை பெறுகிறது. நிந்துவெளியில் சிவன் பிரதான தெய்வமாக வழிபடப்பட்டிருக்கின்றான். இச்சிவனை சிவலிங்கங்களாக மட்டுமன்றி சிவனது மூர்த்தி பேதங்களாகவும் வழிபட்டனர். இந்த வகையில் நடராஜார், யோகி, பசுபதி, சோமஸ்கந்தர் போன்றவற்றைக் குறிப்பிடலாம். சிவனது மூர்த்தி பேதங்களில் பல்வேறு வகையிலும் சிறப்புப் பெறும் நடராஜரை கலை, சமய, தத்துவ நோக்கில் சுருக்கமாக நோக்குவோம்.

கலைகள் எனும் வகையில் கட்டிடம், சிற்பம், இசை, நடனம், ஓவியம், விக்கிரகம் போன்றவை சிறப்பிடம் பெறுகின்றது. சிந்துவெளியில் ஒரு காலைத் தூக்கி ஆடுகின்ற 9 அங்குல நடராஜரின் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னர் பல்லவர் காலத்தில் சீயமங்கலம், ககைக் கோவில் தூணொன்றில் கருங்கல்லில் நான்கு கைகளுடன் நடராஜர் செதுக்கப்பட்டு இருக்கிறது. இராஜசிம்மன் அமைத்த கற்றாளி ஆலயமாகிய காஞ்சி கைலாசநாதர் கோயிலில் நடராஜரின் நாட்டிய கரணங்களில் சி காணப்படுகிறது.

சோழர் காலத்தில் நடராஜப் பெருமானின் சிற்பங்கள் மிகுதியாகக் காணப்படுகின்றது. கொடும்பாளூர் மூவர் கோயிலில் சதுர தாண்டவர் மிக அழகுடையதாகக் காணப்படுகிறது. இராஜராஜ சோழன் அமைத்த தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் நடராஜரின் 108 நாட்டிய கரணங்களையும் தேடிக் கண்டுபிடிக்கம் முயற்சியில் ஈடுபட்டு 81 நாட்டிய கரணங்களைத் தூண்களில் சிற்பமாக செதுக்கியுள்ளதைக் காணலாம். இதன் பிற்பாடு பல ஆலயங்களிலும் நடராஜரின் சிற்பங்களை மிகுதியாகச் செதுக்கினர். இராஜேந்திரனின் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடராஜரின் பல சிற்பங்களைக் காணலாம். 2ம் இராஜராஜனின் தாராசுரம் இராஜராஜேஸ்வரம் கோயிலில் பல நடராஜரின் சிற்பங்களைக் காணலாம்.

பிற்கால சிதம்பரம், திருவண்ணாமலை போன்ற இடங்களில் 108 நாட்டிய கரணங்களும் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளது. இலங்கையிலும் பல ஆலயங்களில் நடராஜர் சிற்பங்களைக் காணலாம்.

வுpக்கிரகவியல் நோக்கிலே சிந்திக்கும் போது சிவனின் மகேஸ்வர மூர்த்தங்களில் சிறப்புப் பெறுவது நடராஜர் ஆகும். இந்தியாவிலே சிதம்பரத்திலே அனவரத தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் ஆனந்தத் தாண்டவ மூர்த்தியை அனைத்துச் சிவாலயங்ளிலும் பிரதிஷ;டை செய்துள்ளனர். ஏன் கலையுலகினால் கவரப்பட்ட மேலை நாடுகளிலெல்லாம் நடராஜர் விக்கிரகத்தைத் தனிச்சிறப்பாக கொடுத்து வைத்திருக்கின்றனர்.

மிகவும் நுட்பம் வாய்ந்த இந் நாட்டிய விக்கிரமாகிய நடராஜரைப் பொதுவாக தாமிரம் (செம்பு), பஞ்ச உலோகங்களில் வடிவமைப்பதே மரபாகக் காணப்படுகின்றது. பத்மபீடத்தின் மேலே முயலகனை ஊன்றியவாறு காணப்படும் இம்மூர்த்தம் வலது காலை முயலகன் மீது ஊன்றியும், இடதுகாலை வலப்புறமாக நீட்டி, விரல்கள் புவியைப் பார்க்கும் முகமாகக் காணப்படுகின்றது. பாதங்களில் சதங்கைகள் காணப்படுகின்றன. இடுப்பில் புலித்தோல் காணப்படுகின்றது. அதன் மேல் அரைக்கச்சாக உத்தரியம் காணப்படுகின்றது. இவ் உத்தரியம் இடப்புறமாக பறந்து கொண்டிருக்கும். மார்பை, பூநூல், உருத்திராட்ச மாலை, இரத்தினாபரணங்கள் அழகு செய்ய 4 புயங்கள் காணப்படுகின்றன. வலது மேற்கை மடிந்து சிம்ம முத்திரையாக உடுக்கை தாங்க கீழ்க்கை மடிந்து அபயகரம் காட்ட, இடது மேல்க்கை அக்கினியைத் தாங்குகின்றது. இவ் அக்கினி நடுவிரலில் காணப்படுகின்றது. இடது கீழ்க்கை உடலின் குறுக்கே தண்டவாக நீண்டு விரல்கள் குஞ்சிதபாதத்தைக் காட்டி நிற்கின்றது. இக்கைகளில் அரச அணிகலன்கள் காணப்படுகின்றன. தலை சற்று நிமிர்ந்து மேல் நோக்கிய வீரப்பார்வையுடன் காணப்படுகிறது. நீண்டு வளைந்த புருவம், தாமரை மலர் போன்ற கண்கள், நெற்றிக் கண், திருநீற்றுக்குறி முகத்தை அழகு செய்கிறது. காதுகளில் பத்திர குண்டலமும், மகரகுண்டலமும் காணப்படுகிறது. சடை இருபுறமும் பறந்து கொண்டிருக்கிறது. இiதை 3, 5, 7, 9 எனப் பல்வேறு எண்ணிக்கையில் செய்யப்படுகின்றது. சடையில் பிறையும், கங்கையிள் முகமும், ஊமத்தம் மலரும், நாகமும் காணப்படுகிறது. தலையின் பின்புறம் சிகாசக்கரம் காணப்டுகின்றது. நடராஜரைச் சுற்றி ஓம் என்ற பிரணவ வடிவில் திருவாசி காணப்படுகின்றது. இதில் அக்கினச் சுடர்கள் வரிசையாகக் காணப்படுகின்றன.

இடப்புறத்தே தனியான பத்மபீடத்தில் சிவாகமசுந்தரி 3 வளைவுகளுடன் கூடி திரிபங்க நிலையில் நிற்பாள். காலில் சிலம்புகள் காணப்படும். இடையில் பட்டாடை அழகு செய்யும். உருண்டு, திரண்டு சற்றுக் கீழ் தொங்கி மார்பும் அதன் மேல் தங்க, இரத்தின ஆபரணங்களும், பதக்கமும் காணப்படும். இரண்டு புயம் வலதுகை மடிந்து விரிகின்ற தாமரை மலரைத் தாங்கி நிற்க, இடதுகரம் நீண்டு வளைந்த கோலமாகக் காணப்படுகின்றது. கைகளில் கங்கணம் (காப்பு அல்லது வளையல்) காணப்படுகின்றது. முகம் கருணை ததும்பி சாந்தமாகக் காணப்படும். காதளவோடிய கண், வில்லுப் போன்ற புருவம், பவளச் செவ்வாய் குங்குமத்திலகம் தெய்வீகத்தை வெளிக்கொணர்கிறது. தலையில் சடைமுடி மீது கிரீடம் காணப்படுகிறது. இங்கும் பின்புறத்தே சிகாசக்கரம் காணப்படுகிறது.

இவ்வாறான உலோக விக்கிரகங்களை முதலில் கூரம் சிவன் கோவிலில் 53உஅ இல் காணலாம். சோழர் காலத்திலேயே அநேக நேர்த்தியான விக்கிரகங்கள் வார்க்கப்பட்டன. கும்பகோணம் நடனபுரீஸ்வரர் கோயில், விருத்தாசலம், விருத்தகரீஸ்வரர் கோயில் இராஜராஜனின் தஞ்சைப் பிரகதீஸ்வரர் கோயில், திருவாலங்காடு, திருவெண்காடு, கங்கைகொண்ட சோழபுரம், கீழையூர்ச்சி சிவன் கோவில் என்பவற்றுள் உள்ள விக்கிரகங்கள் மிக நேர்த்தியானவை. திருவாலங்காட்டு நடராஜர் உலகப் பிரசித்தி பெற்றவர். அம்ஸ்ரடாம் கலைக்கூடத்தில் உள்ள நடராஜர் முன்னழகில் மட்டுமன்றி பின்னழகிலும் சிறப்பானவர். பாண்டியர் காலத்திலும் பல நடராஜர் திருவுரு வார்க்கப்பட்டன. மதுரை, பொருப்பு, மேட்டுப்பட்டி போன்ற இடங்களில் இடதுகாலை ஊன்றி வலது காலைத் தூக்கி ஆடும் நடராஜர். விஜயநகர நாயக்கர் காலத்திலும் ஏராளமான நடராஜர் திருவுரு வடிக்கப்பட்டன என்றாலும் சோழர்காலம் போன்ற கலைச் சிறப்பைக் காணமுடியாது. இலங்கையிலும் பொலநறுவைக்காலம் தொட்டு பல நடராஜர் திருவுருவைக் காண முடிகிறது.

நுடனக்கலை நோக்கிலே நடராஜரே சாஸ்திரத்தின் குருவாக இருந்து பரத முனிவருக்கு 108 நாட்டிய கரணங்களைப் போதித்தார். அவரால் எழுதப்படட நூலே (பரத) நாட்டிய சாஸ்திரம் ஆகும். இவற்றிலுள்ள பல முத்திரைகள் அங்க அமைப்புக்ககள் பார்வை நோக்குடன் நடனக் கலைக்குப் பெரிதும் உதவுகிறது. இராஜராஜ சோழன் நடனக்கலையில் மிக விருப்புக் கொண்டு 81 நாட்டியக் கரணங்களை கண்டுபிடித்ததோடு பல நடன மாதர்களை உருவாக்கி இறைவன் தந்த நடனக்கலையை இறைவனுக்கு நாட்டிய அர்ப்பணமாக வழங்கினான். ஊதாரணமாக தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில் மட்டும் 400 நடன மாதர்களை நியமித்தான். மேலும் நடனமாடும் வேளையில் முதலில், நடனக்கலையையே தந்த நடராஜருக்குப் புஷ;பாஞ்சலி செய்துவிட்டு நடனக் கலையை ஆடும் வழக்கம் அன்று தொட்டு இன்றுவரை இருந்து வருகிறது. எமது நாட்டைச் சேர்ந்த கலாயோகி ஆனந்தக்குமாரசாமி அவர்கள் நடராஜரின் நடனத்தையும், தத்துவத்தையும், சமயத்தையும் ஒருங்கிணைந்து னுயnஉந ழக ளுiஎய (சிவநடனம்) எனும் ஆங்கில நூலை எழுதி மேலை நாடுகளிலம் நடராஜர் புகழைப் பிரமிக்கப் செய்துள்ளார்.

சுமய நோக்கு:
நடராஜரின் திருவுருவத்தைக் கண்டு பல சமய ஞானிகள் நற்கதி பெற்றுள்ளார்கள். தேவர்கள் மட்டுமன்றி பதஞ்சலி, வியாக்கிரபாதர், காரைக்கால் அம்மையார், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திசுவாமிகள், மாணிக்க வாசகர், நந்தனார், சேந்தனார், சேக்கிழார் முதலான பலரைக் குறிப்பிடலாம். தைப்பூசத்தில் பதஞ்சலியும், வியக்கிரபாதரும் ஆனந்த நடனத்தைத் தரிசித்தனர். காரைக்கால் அம்மையார் திருவாலங்காட்டுத் திருநடனத்தைக் கண்டு அதன் சமய தத்துவக்கலை அம்சங்களை திருவாலங்காட்டுப் பதிகங்களில் பாடி இருக்கின்றார். கூட எட்டுத்திக்கும் சென்றுவர சிவன் ஆடுகின்ற அத்திரு நடனத்தை நான் பாடிக்கொண்டு தரிசிக்க வேண்டும் என்கிறார். ஷஷநான் மகழ்ந்து பாடி அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க|| என்றார். நாவுக்கரசர் நடராஜரின் திருக்கோலத்தைக் காண்பதற்காக மனிதப் பிறவியை எடுக்கலாம் என்பதை,

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
புனித்தசடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்தமுடைய வெடுத்தபொற் பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே யிந்த மாநிலத்தே.

சுந்தரர் சிவனது நடனக் காட்சியைக் காண ஐந்து புலன்களையும் கண்களாலே பார்த்து நான்க கரணங்களும் சிந்தையில் நி;ற்க மூன்று குணங்களில் சாத்வீக குணம் மேலிட்டு நிற்க ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி பேரின்ப வெள்ளத்தில் திளைத்து மகிழ்ச்சி பெற்றார் எனச் சேக்கிழார் ஷஷஐந்து பேரறிவும் கண்களே கொள்ள|| என்ற பாடலூடாகக் காட்டுகிறார். திருமூலர் நடராஜரின் சிறப்புக்களை எல்லாம் பல பாடல்களில் எடுத்துப் பாடியுள்ளார்.

ஆனந்தம் ஆடரங்கம் ஆனந்தம் பல்லியம்
ஆனந்தம் வாச்சியம் ஆனந்தம் வாத்தியம்
ஆனந்த மாக அகில சராசரம்
ஆனந்தம் ஆனந்தக் கூத்துகந் தானுக்கே.

காளியோடாடிக் கனகாசலத் தாடி
கூளியோடாடிக் குவலயத்தே யாடி
நீடியநீர் தீகால் நீள்வானிடை யாடி
நாளுற அம்பலத்தில் ஆடும் நாதனே

மானிட ராக்கை வடிவு சிதம்பரம்
மானிட ராக்கை வடிவு திருக்கூத்தே

என்றும் போற்றும் வரிகள் சிந்திக்கத்தக்கவை.

வேக்கிழார் தில்லைப் பெருமானின் திருநடனக் காட்சிகளைத் தனக்கு அடியெடுத்துத்தந்த ஆனந்தப் பெருமானைப் பல இடங்களில் போற்றுகிறார்.

ஷஷஅலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
முலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்||

ஷஷசிற்பரவி யோமமாகும் திருச்சிற்றம் பலத்துள் நின்று பொற்புடன் நடம் செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி|| என்வற்றைக் காணலாம்.

தத்துவ நோக்கு:

இருதய ஸ்தானமாகிய சிதம்பரத்தின் கண்ணே ஆனந்தத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் நடராஜரை 14 சைவசித்தாந்த சாஸ்திரத்திங்களில் உண்மை விளக்கம் மிகத் தெளிவாக விளங்குகிறது. நடராஜரின் ஆட்டமே பஞ்சகிருத்தியத்தை நிகழ்வித்து உலகையும், உயிரையும் இயக்குகின்றது. நடராஜப் பெருமானின் திருவுருவ நோக்கைப் பற்றிச் சிந்திக்கும் போது பஞ்ச கிருத்தியம் மட்டுமன்றி பஞ்சாட்சர மந்திரமும் அதனோடு தொடர்புடையது. இவற்றை திருவதிகை மனவாசகம் கடந்த தேவர் பின்வருமாறு விளக்குகிறார்.

படைத்தல் (சிருஷ;டி) – உடுக்கேந்திய கை
காத்தல் (திதி) – அபயகரம்
அழித்தல் (சம்காரம்) – அக்கினி ஏந்திய கை
மறைத்தல் (திரோபவம்) – ஊன்றிய திருவடி
அருளல்(அனுக்கிரகம்) – தூக்கியதிருவடி (குஞ்சிதபாதம்)

இதையே பின்வரும் உண்மை விளக்கப் பாடல் குறிப்பிடுகிறது.

தோற்றம் துடியதனில் தோயம் திதியமைப்பில்
சுhற்றியிடும் அங்கியிலே சங்காரம் – ஊற்றமாம்
ஊன்று மலர்ப்பதத்தே உற்ற திரோதம் முத்தி
ஞான்ற மலர்ப்பதத்தே நாடு.

ஆகராதி பஞ்சாட்சரமாகிய நமசிவாய மந்திரத்தை நடராஜப் பெருமானில் அவதானிக்கம் போது அது பின்வருமாறு அமைகின்றது.

ய – திருமுடி
வா – திருமுகம்
சி – திருத்தோள்
ம – திருவயிறு
ந – திருவடி (குஞ்சிதபாதம்)

இக்கருத்தையே பின்வருமாறு உண்மை விளக்கப்பாடல் குறிப்பிடுகின்றது.

ஆடும்படிகேள் நல்லம்பலத்தான் ஐயனே
நாடும் திருவடியில் நகரமும் – கூடும்
மகரம் உதரம் வளர் தோள் சிகரம்
பகரும் முகம் வாமுடியப் பார்.

சிகராதி பஞ்சாட்சரமாகிய ஷஷசிவாயநம|| மந்திரத்தையும் நடராஜரின் திருவுருவத்திலேயே காணமுடியும். இது பின்வருமாறு அமையும்.

சி – உடுக்கேறிய கை
வா – வீசுகரம் (இடதுகீழ்க்கை)
ய – தூக்கிய திருவடி
ந – அக்கினி ஏந்திய கை
ம – முயலகன் (அபஸ்மார புருஷன்)

இக்கருத்தையே பின்வரும் உண்மை விளக்கப்பாடல் கூறுகிறது.

சேர்க்குந் துடி சிகரஞ் சிக்கனவா வீசுகரம்
ஆர்க்கும் யகரம் அபயகரம் – பார்க்கிலிறைக்கு
அங்கி நகரம் அடிக்கீழ் முயலகனாத்
தங்கும் மகரமது தான்.

இத்துணை சிறப்பு வாய்ந்த தில்லை நடராஜப் பெருமான் பொன்னம்பலத்திலிருந்து அருள் பாலித்திருப்பதால் நாமும் ஆனந்தத்தாண்டவ மூர்த்தியை மனம் மெய் மொழிகளால் போற்றி வழிபட்டு ஷஷமண்ணில் நல்ல வண்ணம் வாழ்வாங்கு வாழ்ந்து செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ் பல்லோரும் ஏற்றிப் பணிய வாழ்வோமாக||

ஷஷபொன்னம்பலம் வாழ்க||

You may also like

Leave a Comment