Home வரலாறு வற்றாப்பணை அம்பாள் ஆலய நிருவாகமும் பரிபாலன சபையும்

வற்றாப்பணை அம்பாள் ஆலய நிருவாகமும் பரிபாலன சபையும்

கால மாற்றங்களும் வளர்ச்சிப்படிகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது இயல்பானதே. அம்பாள் ர்ழ நாட்டின் பத்தாம் பதியாகிய வற்றாப்பளையில் மாடு மேய்ந்த சிறுவர்களுக்குக் காட்சி கொடுத்த காலம் தொடக்கம் இன்றுவரை ஆலயம் நிர்வகிக்கப்பட்ட வழிகளையும், நிர்வாகசபையின் தோற்றம், கட்டுப்பாடு, கடமைகள் என்பவற்றையும் சுருக்கமாக விள்க்க முயல்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். ஆரம்பத்தில் ஆலயம் அமைந்துள்ள இடமானது: இருப்பக்கம் நந்திக்கடலும் மற்றிரு பக்கம் காடும், நீரூற்றுக்களுமு;, புல் நிலங்களும் அமைந்ததொரு அமைதியான தனியிடமாகவு இருந்துள்ளது. ஏறக்குறை இரண்டு மைல் தூரத்துக்கப்பாலேயே மக்கள் குடியிருப்புக்கள் அமைந்திருந்தன. வருடாந்தம் நடைபெறும் பொங்கல் நிகழ்ச்சியும், மக்கள் தாம் வைத்த நேர்த்திக்கடன்களை நிறைவேற்றச் செய்வித்த பூசை, மடை, மண்டகப்படி, குளிர்த்தி என்பஒவுமே அக்காலத்தில் நடைபெற்ற ஆலய நிகழ்ச்சிகளாகும்.

‘கட்டாடுடையார்’ என அழைக்கப்பெறும் பூசாரியாரே இக்காலத்தில் ஆலயப் பூசைகள் நிருவாகங்கள் எல்லாவற்றுக்கும் பொறுப்பாய் இருந்துள்ளார். பொங்கலுக்குத் தேவையான நெல், தேங்காய், பழம், பாக்கு, வெற்றிலை, பால், நெய் போன்ற எல்லாப் பொருட்களையும் வற்றாப்பளையிலும் முள்ளியவளை, தண்ணீரூற்று, முல்லைத்தீவு போன்ற அயற் கிராமங்களிலும் வாழ்ந்த வசதிபடைத்த கமக்காரரிடமிருந்து பெற்றுள்ளார்.

இவ்வழக்கத்தின் அiடிப்படையிலேயே மிக அண்மைக்காலத்தில்கூட ஒரு சில கமக்காரர், பூசாரியிடம் பொங்கல் நெல் ஒப்படைக்கும் முறை இருந்து வந்துள்ளது என அறிய வந்துள்ளது. கிராம மக்களுக்கு, நோய்கள் காணும்போது அவற்றிற்கெல்லாம், பூசாரியார் கொடுக்கும வேளை (மஞ்சள் தோய்த்துப் பூசையில் வைத்த சீலை) விபூதி, தீர்த்தம் என்பனவே மருந்தாக உதவின. இதனால் சமூகத்தில் உயர்ந்ததொரு இடத்தினைப் பூசாரியார் பெற்றுக் கொண்டதுடன் ஆலய நிhவாகத்தினையும் நடாத்தித் தேவையான பொருளுதவிகளையும் பெற்றுக் கொண்டார். இவ்விதம் வேளை, வீபூதி முதலியன கொடுக்கும் வழக்கம் ஆலயத்தில் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எனவே இக்காலத்தில் ஆலயம் சம்பந்தமான எல்லாக் கடமைகளும், நிருவாக அதிகாரமும் பூசாரிக்கே உரியதாயிருந்துள்ளது.

வன்னியர் காலம்.

ஆடுத்தபடியான காலகட்டம் ஆலயத்திற்கு வன்னி நாட்டின் குறுநில மன்னர்களான வன்னியரின் தலையீடும் ஆதரவும் கிடைத்த காலமாகும்.அம்பாளின் அருட்கருணையில் ஈடுபாடு கொண்ட வன்னி மன்னர்கள் ஆலயப் பொங்கலுக்குத் தேவையான பொருள், மற்றும் உதவிகளைச் செய்தனர். இக்காலத்திலேயே கட்டாடுடையாருக்கும், பொங்கல் பணிகளில் உதவி செய்யவும், ‘குடிமக்கள்’ என வழங்கப்படும் தொழில் அடிப்படையிலான மக்களின் சேவை புகுத்தப்பட்ட தெனலாம். சாதிப்பிரிவைக் கொண்ட வேளாளத் தலைவர்கள் எனச் சரித்திரம் கூறும்.

ஆலயப் பொங்கலில் வரிசை வாத்தியங்கள் புகுத்தப்பட்டதும், பொங்கல் காலத்தில் ‘நோங்புக்காhர்’ என்னும் பயரன் தொண்டு புரியும் பணியாளர்கள் அமர்த்தப்பட்டதும் இவ்வன்னியரசர் காலத்திலேயேயாகும். அதேபோல மன்னரது இராசதானி ஒன்று முள்ளியவளையில் அமைந்திருந்ததனாற், பொங்கல் சம்பந்தமான ஒரு பகுதி நிகழ்ச்சிகள் முள்ளியவளை ஆலயத்தில் நடக்கும்முறை ஆரம்பித்ததும் இவ் வன்னியர் காலத்திலேதான் எனக் கூறலாம். இவ் வன்னி மன்னருள் ஒருவரே ஆலயத்தின் தேவைக்காகப் பெருமளவு நெல்வயலையும் உபகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இக்காலத்திலும் ஆலய பூசை, நிர்வாகம் என்பன கட்டாடுடையாரிடமே இருந்துள்ளது.

பிராமணர் நிர்வாகக் காலம்

வன்னி நாட்டில் வன்னியர்களின் ஆட்சியின் பிற்பகுதியிலே முள்ளியவளையில் பிராமணர்கள் குடியமர்த்தப்பட்டனர். வற்றாப்பளை அம்பாள் ஆலயத்திற்கும் அடியார் தொகை படிப்படியாக அதிகரித்துள்ளது.கமக்காரரான கட்டாடுடையார் ஆலயப் பணிகளை அதிகமாகக் கவனிக்க வேண்டியிருந்ததால் தமது குலத்தொழில் பாதிக்கப்பட்டமையினாலோ அல்லது குடிபுகுந்திருந்த பிராமணரின் வருவாயை அதிகரிப்பதற்காகவோ, வேறு காரணங்களுக்காகவோ, வற்றாப்பளை அம்பாள் ஆலயத்திலும் அந்தணர்கள் பூசைக்கமர்த்தப்பட்டனர்.

படிப்படியாக மக்கள் தொகை அதிகரிக்க, ஆலயத்திலும் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் பூசை செய்யும் முறை கடைப்பிடிக்கப்பட்டது. பொங்கல் நிகழ்ச்சிகளிலும் ஐயரின் பங்குபற்றறுதல் இடம்பெற்றது. ஐயர் பூசை செய்யும் ஆலயமொன்றில் பூசாரியார் முதன்மை பெறுவது முடியாததொன்றுதானே.காலகதியில் பூசைப் பொறுப்புடன் நிர்வாகப் பொறுப்பும் பிராமணர் கையில் சேர்ந்தது. விசேட தினங்களில் மட்டும், வேளை, விபூதி வழங்குவதும், பொங்கல் காலத்தில் தனது கடமைகளைப் புரிவதுமாகப் பூசாரியாரின் உரிமை சுருங்கியது.

பொங்கல் காலத்தில் மட்டும் பூசாரியார் பிரதான பங்கு கொண்டிருந்தார். பழைய வழக்கப்படி தனது வாடிக்கையாளரிடம் பொங்கல் நெல் பெற்று வந்தார். மற்றைய செலவுகளை ஐயர் ஏற்றுச் செய்தார். மக்களும் தாராளமாக உதவிகள் புரிந்தனர்.

பூசைகள், காணிக்கைகள், உபயங்கள், அபிஷேகங்கள், அர்ச்சனைகள், வேளை, விபூதி கொடுத்தல் போன்றவற்றால் வரும் வருமானம் யாவும் ஐயருக்கானது. பூசாரியார் தானும் குறித்த ஓர் இடத்;தில், வெள்ளை விரித்து வேளை, வீபூதியுடன் இருப்பார். இவரிடத்தில் வரும் அரிசி, தேங்காய், வேளை விற்ற பணம் என்வற்றைத் தனது வருமானமாகப் பெற்றார். ஐயர் தனது பணியாளருக்கும், பூசாரியார் தனது குடிமக்களுக்கும் கூலி கொடுத்தார். இக்கொடுப்பனவு யாவும் பொருட்களாகவே நடைபெற்றன. அரிசி, தேங்காய், சட்டி, பானை முதலிய பொருட்கள் வழக்கமாக இடம் பெற்று இருந்தன. பொங்கல் வளந்தும் (பொங்கல்ப்பானை ) ஒரு சூளை சட்டி பானையும் வழங்கும் கடமை குயவனுக்கிருந்தது. கடந்த ஏழு எட்டு ஆண்டுகளுக்கு முன்புகூட இம்முறை நடைமுறையிலிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்விதமாக இரட்டை ஆட்சிக் காலமானது ஆலயத்தைப் பொறுத்தவகையில் நல்ல காலமாகக் கொள்ள முடியவில்லை. ஆலயத்திற்கு அதிக வருமானத்தையும் பெருந்தொகையில் அடியார் வருகையும் தரும் பொங்கல் காலத்தில் ஐயரும் அவரது ஆதரவாளர்களும் ஒருபுறம், பூசாரியாரும் அவரது உறவினரும் இன்னொரு புறமுமாகத் தமது வருமானத்தைப் பெருக்க முனைந்தனரேயன்றி, ஆலய நன்மையைப் பற்றிச் சிந்திக்க அவர்களுக்கு நேரமிருக்கவில்லை. ஐயருக்கும் பூசாரியாருக்கும் வருமானம் தேடுவதில் உதவி செய்பவர்களுள் ஒரு பகுதியினர், சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தித் தமது வருமானத்தைப் பேணுவதற்கே முனைந்தனர். இவ்விதமான குறைகள் மலிந்திருந்த காலத்தில், ஆலயத்தின் கட்டடம் பல ஆண்டுகளைக் கண்டும் புனரமைப்புகள் ஏதுமின்றியிருந்தது. வருமடியார்களுக்குத் தங்குமட வசதியோ, நீர்;வசதியோ வெளிச்ச வசதியோ கிடைக்கவில்லை. இவ்விதம் ஆண்டுகள் பல கடந்தன.

பரிபாலன சபை ஆரம்பம்

அம்பாள் ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை உற்று நோக்கில், அனைத்தும் தெய்வச் செயல்களாகவே நிகழ்ந்துள்ளமையை உணர முடியும். நீக்கப்பட வேண்டியனவும், நீக்கப்பட வேண்டியவர்களும் தாமாகவே நீங்க, சேர வேண்டியனவும், சேர்ப்பிக்கப்பட வேண்டியவர்களும் வலியத் தாமாகவே வந்து சேர்;வதையும் இன்றுவரை காணமுடிகின்றது. இதற்கிணங்கத் தமக்காக வருமாந்தேடும் தனியுரிமைகள், தாமும், தமக்கும் என்நுமுரிமையேது மற்றப் பொது நிருவாகமொன்று ஏற்பமு; ஒரு காலகட்டம் வந்து கூடியது.

ஆலயம் வரும் அடியார்களின் வசதியை முன்னிட்டு ஆலயத்தில் மடம் ஒன்றினை அமைக்க வேண்டுமென்றும் எண்ணம் பலருக்கும் உதிக்கவே வற்றாப்பளையிலும் தண்ணீரூற்றிலுமுள்ள சிலர், முல்லைத்தீவில் வாழ்ந்த முதலியார் திரு. ஆ.சி. கனகசபாபதி து. P. ரு. ஆ. அவர்களின் தலைமையில் அப்போதிருந்த ஆலுய ஐயரிடம் சென்றனர். ஐயரிடம் தமது எண்ணத்தைத் தெரிவித்தவர்கள் வேறொரு எண்ணத்துடன் திரும்பினர். வற்றாப்பளை அம்பாள் ஆலயம் சம்பந்தமாகச் சிந்திக்கவும் செயலாற்றவும் தனக்கும் தெரியுமென்றும், மற்றவர்களுக்கு அவ்வுரிமை இல்லை என்றும், ஐயரின் பதில் கிடைத்ததாம். இதன் தொடர்ச்சியாக வவுனியா அரசாங்க அதிபருக்கும் மகஜர் (பெட்டிசம்) நூற்றுக்கணக்கான கையொப்பங்களுடன் அனுப்பப்பட்டது. 1955 ஆம் ஆண்டு அனுப்பிய இம்மகஜரில், ஆலய உரிமை ஐயர்மாருக்கு இல்லை என்றும், அது சம்பந்தமாக விசாரித்துப் பரிபாலனசபை ஒன்று அமைக்கப்பட வேண்டுமென்றும், வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இக்கோரிக்கைக்கு இணங்க இதுபற்றி விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும் பொருட்டு, மூவரடங்கிய ஆணைக்குழு ஒன்று அரசாங்க அதிபரினால் நியமனம் பெற்றது.

இக்குழு 1956ஆம் ஆண்டு தைமாதம், ஆலயத்துடன் சம்பந்தப்பட்ட ஐயர்மார், பூசாரியர், பணியளர்கள், கிராம முன்னேற்றச் சங்கத் தலைவர்கள், உள்ளராட்சி மன்றத் தலைவர்கள், பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து விசாரணைகளைப் பெற்றுத் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. இவ்வறிக்கையைத் தொடாந்து, அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்ட தீர்மானத்திற்கிணங்க வரையறுக்கப்பட்ட சட்ட திட்டங்களைத் கொண்ட பரிபாலனசபை ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இதன் படி ஆலயத்தினைப் பரிபாலிக்கும் பொறுப்பு பரிபாலன சபைக்குரியதாயிற்று.

வற்றாப்பளை கண்ணகி அம்பாள் கோயில் பரிபாலனசபை

வாக்களார் சபை ( Electoral Roll )
வடமாகாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நல்லொழுக்கமுள்ள 21 வயதுக்கு மேற்பட்ட இந்துக்கள் இவ்வாக்காளர் சபையில் உறுப்பினராக முடியும். வருடாந்தம் ஆடி மாதம் முதலாந்திகதிக்கு முன், பத்து ரூபாவுக்குத் குறையாத தொகையைக் கட்டிப் பற்றுச் சீட்டுப் பெறுவதன் மூலம், உறுப்புரிமையைப் பெறலாம். வருடாந்தப் பொதுக் கூட்டத்pற்கான அழைப்பு தனித்தனியாகக் கடிதமூலம் செயலாளரினால் அறிவிக்கப்படும். குறித்த கூட்டத்துக்குச் சமூகமளித்து, பரிபாலன சபைக்கான 20 உறுப்பினரைத் தெரிவு செய்யும் உரிமை இச்சபைக்குரியது.

பரிபாலன சபை
வாக்காளர் சபையுள், அவர்களினால் தெரிவு செய்யப்பட்ட 20 உறுப்பினரும், நிரந்தர உறுப்பினர்களான 11 உறுப்பினருமாக மொத்தம் 31 பேரைக் கொண்டதே இப் பரிபாலன சபையாகும். தெரிவு செய்யப்படும் 20 பேரும் கரைதுறைப்பற்றை வசிப்பிடமாகக் கொண்டவர்கள். இவர்கள் குறிப்பிட்ட கிராமங்களின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்.

கூட்டம் :
சபையின் கூட்டங்கள் யாவும் ஆலய மடமண்டபத்தில் கூடும். முதல் கட்டத்தில் தலைவர் ஒருவர், இணைச் செயலாளர் ( இருவர்) உப தலைவர் ஒருவர், தனாதிகாரி ஒருவர், கணக்குப் பரிசோதகர் ஒருவர் ஆகியோர் தெரிவு செய்யப்படுவர்.

தலைவர்:
தலைவரே சபையின் உச்ச அதிகாரங்களைக் கொண்ட நிர்வாக உத்தியோகத்தவராவார். கூட்டங்களைத் தலைமை தாங்கி நடாத்துபவர் இவரே. தலைவர் சமூகமளிக்காதவிடத்து, உபதலைவர் இவரது கடமைகளைச் செய்வார்.

இணைச் செயலாளர்கள்.
இணைச் செயலாளரிருவருக்கும் கடமைகள் பிரித்தளிக்கப்படும். ஆனால் ஒருவரில்லாத சமயம் இரு கடமைகளையும் செய்யும் பொறுப்பு இவர்களுக்குண்டு. கூட்டங்களைக் கூட்டுதல், கூட்ட அறிக்கைகள், பிரேரணைகள், சுற்று நிருபங்கள், சட்ட திட்டங்கள் என்பனவற்றிற்குப் பொறுப்பாயிருத்தல், அவற்றைச் சரிவர நிறைவேற்றுதல், சபையினால் காலத்துக்காலம் எடுக்கும் நிர்மானங்களை நடைமுறைப்படுத்தல். கடிதத் தொடர்புகள் வைத்தல், ஆலய நடைமுறைகளை மேற்பார்பை செய்தல், இவர்களது கடமைகளாகும்.

பொருளாளர்.
ஆலய சம்பந்தமான எல்லா வரவு செயலவுகளுக:கும் பொறுப்பானர் இவரே. நிதியங்கள், பொருட்கள் முதலான எல்லா வருமானங்களையும் சேர்த்தல், பாதுகாத்தல், செலவு செய்தல், அவற்றிற்கான சரியான கணக்கு வைத்தல் திருத்திய கணக்கு வைப்பு முறையில் கணக்கறிக்கை வைத்திருத்தல் என்பன இவரின் பொறுப்பாகும்.

கோயில் நிதி நடவடிக்கை
நிதி சம்பந்தமான எல்லாப் பொறுப்பும் பொருளாளருக்குரியது. முலைத்தீவு மக்கள் வங்கியல் பரிபாலன சபையின் பெயரிலுள்ள கணக்கில் பணம் முழுவதும் இடப்படும். கொடுப்பனவுகள் யாவும் காசோலைகள் மூலமே நடைபெறும். வவுச்சர் பத்திரங்களில் பூரணப்படுத்தப்பட்ட கொடுப்பனவுகள் செயலாளரினால் சிபார்சு செய்யப்பட்ட பின்பே பணம் வழங்கப்படும். காசோலைகள் பொருளாளரினதுமு;, தலைவர் அல்லது செயலாளரினதும் கையொப்பமிடப்படும் பொங்கல் காலத்தில் ரூபா 3000ஃஸ்ரீ மும், சாதாரண காலத்தில் ரூபா 500ஃஸ்ரீ உம்  அல்லது இவற்றிற்குக் குறைவான தொகையினையே பொருளாளர் கையிருப்பாக வைத்திருக்க முடியும்.

அன்பளிப்புகளும் உபயங்களும்
ஆலயத்துக்கு அடியார்களினால் வழங்கப்படும் அன்பளிப்புக்கள், உபயங்கள் எல்லாவற்றிற்கும்  உரிய முறைப்படியினாலான பற்றுச் சீட்டு வழங்கப்பட வேண்டும். பற்றுச் சீட்டுக்களின்றி எந்த விதப் பொருட்களையும் பெற முடியாது.

பூசாhரியார், ஐயர், முகாமையாளர், பிற ஊழியர்கள்.
ஆலயக் கிருத்தியங்களையும், கடமைகளையும் நிறைவேற்றும் பொருட்டு மேற்குறிப்பிட்ட சேவையாளர்களை நியமிக்கவும், அவர்களின் செயல்கள் பற்றி மேற்பார்வை செய்யவும், விசாரணை செய்யவும், நிதி வழங்கவும், தவறுகள் புரியின் வேலை நீக்கம் செய்யும், இவர்களுக்கான சம்பளத்தினைக் காலத்துக்குக் காலம் ஏற்றபடி வழங்கவும் பரிபாலன சபைக்கு அதிகாரமுண்டு.

பொது
பரிபாலன சபைக் கூட்டம் கூட்டுதற்கான கோரம் 10 ஆகும். வாக்காளர் சபையிலுள்ள 10க்குக் குறையாத அங்கத்தவர்கள் எழுத்துமூலம் கோருமிடத்து, விசேட கூட்டமொன்றினைக் கூட்டும் நடவடிக்கையைச் செயலாளர் மேற்கொள்ள வேண்டும். சாதாரண அங்கத்தவரொருவர் விலகிக் கொண்டால், வாக்காளர் சபையிலிருந்து புதியவர் ஒருவர் அங்கத்தவராகத் தெரிவு செய்யப்படுவர். மூன்று தொடர்ச்சியான கூட்டங்களுக்குச் சமூகமளிக்காத சாதாரண அங்கத்தவர், தனது அங்கத்துவத்தை இழப்பர். மூன்று வருடாந்தப் பொதுக் கூட்டங்களுக்கும் தொடர்ச்சியாகச் சமூகமளிக்காத நிரந்தர உறுப்பினர் ஒருவர், பதவியை இழப்பர். இவரது உரிமை அடுத்த உரிமையாளருக்குச் சேரும். தவறான நடவடிக்கையில் ஈடுபடுமு; அங்கத்தவர், ஒருவர்பற்றி விசாரணை செய்து தேவையானால் நீக்குமதிகாரம் பரிபாலன சபைக்குரியது. ஒன்றுக்கு மேற்பட்ட பிரேரணைகள் வருமிடத்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டு அதிகப்படியான வாக்குகளால் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அத்துடன் நிரந்தர உறுப்பினர் 11 பேருள் அதிகப் படியானோரின் ஆதரவு பெறாத தீர்மானங்கள் நடைமுறைப்படுத்த முடியாதவையாகும்.

நன்றி
கடந்த இருபதாண்டுகளுக்கு மேலாக ஆலயத்தினைப் பரிபாலித்து வரும் பரிபாலன சபையானது, பலரினது நன்மதிப்பினையும், பக்தர்களின் நம்பிக்கையையும் பெற்று வருவதற்கான காரணம், ஆலயத்தின் நிதி சம்பந்தமாகச் சரியான நடைமுறை இருப்பதும் பலதரப்பட்ட மக்களினது ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைப்பதுமேயாகும்.

இவ்விதமான சபையொன்றினைத் தோற்றுவிக்க உதவியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கடமை எமக்குண்டு.
ஆலய வளர்ச்சியில் கருத்துக் கொண்டு, ஐயர் காலத்திலிருந்தே உழைத்தவரும், பரிபாலன சபையின் தோற்றத்துக்குப் பாடுபட்டவரும், ஆரம்ப காலத் தலைவருமான முதலியார் திருவாளர் ஆ.மு கனகசபாபதியவர்களுக:கு எமது நன்றியைத் தெரிவிப்பது கடமையாகும். சபையின் நீண்;ட காலத் தலைவரும் ஆலய உரிமை சம்பந்தமான கோடு நடவடிக்கைகளில், பரிபாலன சபைக்காக உழைத்தவரும் பலரின் எதிர்ப்புக்களையும் துணிகரமாக எதிர்த்து நின்று வெற்றி பெற்றவருமான, சட்டத்தரணி தம்பையா முதலியார் சபாரத்தினம் அவர்களுக்கும் எமது மனமார்ந்த னநற உரித்தாகுக.

ஆரம்ப காலத்தில் உரிமையையும் வருவாயையும் பெற்று வநடட பூசாரியார் குடும்பத்தினர், தமது உரிமையையும் வருவாயையும் ஆலயத்துக்காக விட்டுக் கொடுக்க முன்வந்து, பரிபாலன சபைக்கு இன்றுவரை ஒத்துழைப்பு நல்கி வருகின்றார். அத்துடன் கட்டாடுடையார் குடும்பத்தினைச் சேர்ந்த வற்றாப்பழையின் காலஞ் சென்ற கதிர்காமர் பொன்னையா அவர்கள் தம்மாலியன்ற பணிகள் மூலம் பரிபாலன சபையைத் தோற்றுவிக்க உதவியராவர். அவர்களுக்கும் எமது னநற உரித்தாகுக.

பரிபாலன சபை ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப ஆண்டுகளில் ஐயர் ஆதரவாளருக்கும், ஏனையோருக்குமிடையில் நேரடியான மோதல்கள் கூட நடைபெறும் சந்தர்ப்பங்கள் கிட்டின. இந்தச் சந்தர்ப்பங்களிலெல்லாம் தோளோடு தோள் கொடுத்துதவிய பொது மக்கள் பலருக்கும் குறிப்பாகப் பல ஆண்டுகள் பரிபாலனசபைக் காரியதரிசியாக இருந்த திரு. சி. வினாசித்தம்பி அவர்கள் திரு. தா. நடேசபிள்ளையவர்கள், திரு.க. பொன்னையா அவர்கள், வவுனியாவின் தற்போதைய தேசிய அரசுப் பேரவை உறுப்பினர் திரு. தா. சிவசிதம்பரம் அவர்கள், முள்ளியவளை திரு. க பொன்னம்பலம் அவர்கள் ஆகியோர் எமது நன்றிக்குரியவர்களாவர்.  அத்துடன் பரிபாலன சபையின் தோற்றத்திற்காகவும் ,வளர்ச்சிக் காகவும் பல்வேறு கிராமங்களிலிருந்து ஆதரவு கொடுத்துதவிய பொது மக்களும் அரச ஊழியர்களும் எமது மனமாந்த்த நன்றிக்குரியவர்களாவர்.

You may also like

Leave a Comment