வளர்ச்சிபடிகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது இயல்பானதே.
அம்பாள் ஈழ நாட்டின் பத்தாம் பதியாகிய வற்றாப்ளையில் மாடு மேய்த்த சிறுவர்களுக்குக் காட்சி கொடுத்த காலம் தொடக்கம் இன்றுவரை ஆலயம் நிர்வகிக்கபட்ட வழிகளையும்நிர்வாகசபையின் தோற்றம், கட்டுப்பாடு, கடமைகள், என்பவற்றையும் சுருக்கமாக விளக்கமுயல்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.ஆரம்பத்தில் ஆலயம் அமைந்துள்ள இடமானது இருபக்கம் நந்திகடலும் மற்றிரு பக்கம் காடும், நீரூற்றுக்களும், புல் நிலங்களும் அமைந்ததொரு அமைதியான தனியிடமாகவே இருந்துள்ளது. ஏறக்குறைய இரண்டு மைல் தூரத்துக்கப்பாலேயே மக்கள் குடியிருப்புகள் அமைந்தன.
வருடாந்தம் நடைபெறும் பொங்கல் நிகழ்ச்சியும், மக்கள் தாம் வைத்த நேர்த்திகடன்க நிறைவேற்றச் செய்வித்த பூசை ,மடை, மண்டகபடி,குளிர்த்தி என்பன அக்காலத்தில் நடைபெற்ற ஆலய நிகழ்சிகளாகும்.
“கட்டுடையார்” என அழைக்கப்பெரும் பூசாரியரே இக்காலத்தில் ஆலயபூசைகள், நிர்வாகங்கள் எல்லாவற்றுக்கும் பொறுப்பாய் இருந்துள்ளார். பொங்கலுக்குத்தேவையான நெல், தேங்காய், பழம், பாக்கு, வெற்றிலை, பால், நெய், போன்ற எல்லாப்பொருட்களும் வற்றாப்ளையிலும் முள்ளியவளை, தண்ணீரூற்று முல்லைதீவு போன்ற அயற் கிராமங்களிலும் வாழ்ந்த வசதிபடைத்த கமகாரரிடமிருந்து பெற்றுள்ளனர்.
இவ்வழக்கத்தின் அடிப்படையிலேயே, மிக அண்மைக்காலதில்கூட ஒரு சில கமக்காரர், பூசாரியிடம் பொங்கல் நெல் ஒப்படைக்கும் முறை இருந்து வந்துள்ளது என அறிய வந்துள்ளது. கிராம மக்களுக்கு நோய்கள் காணும்போது அவற்றிற்கெல்லாம், பூசாரியார் கொடுக்கும் வேளை (மஞ்சள் தேய்த்துப் பூசையில் வைத்த சீலை ) வீபூதி, தீர்த்தம் என்பனவே மருந்தாக உதவின. இதனால் சமூகத்தில் உயந்ததொரு இடத்தினைப் பூசாரியார் பெற்றுக் கொண்டதுடன் ஆலய நிர்வகதினையும் நடத்தித் தேவையான பொருளுதவிகளையும் பெற்றுக் கொண்டர். இவ்விதம் வேளை, வீபூதி முதலியன கொடுக்கும் வழக்கம் ஆலயத்தில் இன்று கடைப்பிடிக்கபட்டு வருவது குறிப்பிடத்தக்கது .
எனவே இக்கலத்தில் ஆலயம் சம்பதமான எல்லாக் கடமைகளும், நிருவாக அதிகாரமும் பூசரிக்கே உரியதாகியிருந்துள்ளது.
மிகுதி விரைவில் தொடரும்………