வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய கட்டிட புனர்நிர்மானப் பணிகளுக்கு உதவிகள் கோரப்படுகின்றன... ...
     
 
 
 
 
 
       

முல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளைக் கிராமத்தில் எழுந்தருளி அருட்கடாச்சம் வழங்கிக் கொண்டிருக்கின்ற கண்ணகை அம்மன் ஆலய இணையத் தளம் ஒன்றினை உலகெங்கும் பரந்து வாழுகின்ற கண்ணகி அடியார்களின் முன் கொண்டுவருவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம். இந்த இணையத்தளத்தின் மூலமாக வற்றாப்பளைக் கண்ணகி ஆலயத்தில் வருடா வருடம் நடைபெறுகின்ற நிகழ்வுகளை ஒளிப்படங்களாகவும், புகைப்படங்களாகவும், கட்டுரைகளாகவும், கவிதைகளாகவும் நேர்காணலாகவும் அவ்வப்போது தருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றினை உலகெங்கும் பரந்து வாழும் அடியார்கள் பார்த்துப் பயனடையலாம்.

மேலும் இவ் இணையத்தளமானது வெளிநாடுகளில் வாழுகின்ற அடியார்களது நன்மைகள் கருதியும் உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் உங்களது கோவிற் கடமைகளைச் செய்வதற்கும், நேர்த்திக்கடன்களை நிறைவாக்குவதற்கும், வற்றப்பளைச் சந்நிதானத்தில் இருந்து திருநீறு, குங்குமம், சந்தனம், வேளை போன்ற பிரசாதங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் தரப்பட்டுள்ள தொடர்பு இலங்கங்களுடனோ, அல்லது மின்னஞ்சலுடனோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

வெளிநாடுகளில் இருந்து வற்றாப்பளைச் சந்நிதானத்திற்குத் தரிசனத்திற்காகச் செல்பவர்கள் வற்றாப்பளைக் கோவிலின் சுற்றாடலிலேயே தங்கியிருந்து தரிசனம் செய்வதற்கு வசதியாக தங்குமிட வசதிகள் செய்து கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனவே தாங்கள் கண்ணகை அம்மன் ஆலயத்துடன் ஒரு மாதத்திற்கு முன்பாகத் தொடர்பு கொண்டால் இந்த ஒழுங்குகள் தங்களுக்குரிய முறையில் செய்து தரப்படும் என்பதனைத் தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.

'ஆலய தரிசனம் கோடி புண்ணியம்
அம்மன் தரிசம் ஆத்ம புண்ணியம்.'

 


ஆலய பரிபாலன சபை, வற்றாப்பளை முல்லைத்தீவு.

தொலைபேசி:+94-24 3243558
மின்னஞ்சல் : info@vattappalaikannaki.com

   
 
 

Copyright © 2010 Vattrapalai Kovil. All Rights Reserved.

Visitors :02235